ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் ஈடுப்படும்போது முக்கிய மாடலாக விளங்கவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயர் ‘ப்ரோலாக்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

வட அமெரிக்காவில் வருகிற 2024ல் இருந்து விற்பனையை துவங்கவுள்ள ஹோண்டா ப்ரோலாக், எஸ்யூவி ரக காருக்கான அனைத்து தோற்ற பண்பையும் கொண்டிருக்கும். அதேநேரம் தற்போதைய எலக்ட்ரிக் கார்கள் கொண்டிருக்கும் க்ரில் அற்ற முன்பகுதியையும் நிச்சயம் இந்த ஹோண்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

ஹோண்டாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் வரிசைக்கு ப்ரோலாக் அடித்தளமாக இருக்கும் என கருதப்படுகிறது. இவி விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஆதிக்கத்தை செலுத்த காய் நகர்த்தி வருகின்றன.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

இந்த போட்டியில் பங்கேற்க இந்த ஜப்பானிய நிறுவனத்திற்கு ப்ரோலாக் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கும். ப்ரோலாக்கில் எந்த மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை, இவை வெளியாகுவதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

இதுகுறித்து அமெரிக்க ஹோண்டா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் டேவ் கார்ட்னர் அளித்த பேட்டியில், எங்களது பேட்டரி வாகனங்களின் முதல் தொகுப்பு, எங்களது மின்மயமாக்கலுக்கான மாற்றத்தை தொடங்கி வைக்கவுள்ளது.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

ஹோண்டா ப்ரோலாக் என்ற பெயர் நமது பூஜ்ஜிய மாசு உமிழ்வு எதிர்காலத்தை குறிக்கிறது. ப்ரோலாக், சிறந்த செயல்படுதிறன் மற்றும் ஹோண்டா காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளையும் பெற்று பேட்டரி-எலக்ட்ரிக் எஸ்யூவி காராக வெளிவரவுள்ளது என்றார்.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

அமெரிக்கா எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தையாக வேகமாக மாறி வருகிறது. இத்தகைய நாட்டில் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சந்தையில் நேரடியாக டெஸ்லா, ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் டொயோட்டாவின் போட்டியினை ஹோண்டா நிறுவனம் சந்திக்கவுள்ளது.

ஹோண்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார், ப்ரோலாக்!! 2024ல் அறிமுகப்படுத்த திட்டம்!

2040க்குள் குறிப்பாக வட அமெரிக்காவில் விற்பனை செய்யும் வாகனங்கள் அனைத்தையும் பூஜ்ஜிய மாசு உமிழ்வு வாகனங்களாக மாற்ற ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் எளிதான காரியம் அல்ல என்றாலும், இந்த சவாலை ஹோண்டா செய்து முடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Prologue announced, will be company's 1st mass-market electric SUV.
Story first published: Tuesday, June 29, 2021, 23:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X