Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 ஹோண்டா எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கான ஆக்ஸஸரீகள் வெளியீடு!! ஜப்பானில் ஏப்ரலில் அறிமுகமாகிறது...
2021 ஹோண்டா எச்ஆர்-வி காருக்கான அர்பன் மற்றும் கேஷுவல் ஸ்டைல் ஆக்ஸஸரீ தொகுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சமீபத்தில்தான் புதிய தலைமுறை எச்ஆர்-வி காரை உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவந்தது. வெஸல் என்ற பெயரில் இந்த நடுத்தர அளவு எஸ்யூவி கார் வருகிற ஏப்ரல் மாதத்தில் முதலாவதாக ஜப்பானில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக தான் தற்போது இந்த க்ராஸ்ஓவருக்கான ஆக்ஸஸரீகள் அர்பன் ஸ்டைல் மற்றும் கேஷுவல் ஸ்டைல் என்ற இரு விதமான பெயர்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் அர்பன் ஸ்டைல் தொகுப்பில் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர் கார்னிஷ் அடங்குகின்றன.

இந்த கார்னிஷ் ஆக்ஸஸரீ, பம்பர்களின் அகலத்தை அதிகரிக்கும் வகையில் க்ரோம் ட்ரிம்-ஆக வழங்கப்படும். இவற்றுடன் இந்த ஆக்ஸஸரீ தொகுப்பில் பம்பர்களுக்கு தாழ்வான ஸ்கிர்ட்டையும் வாடிக்கையாளர் பெறலாம்.

மேலும் எச்ஆர்-வி காரில் வழங்கப்பட்டுள்ள மல்டி-ஸ்லாட் டிசைனிலான க்ரில்லிற்கு பதிலாக இந்த ஆக்ஸஸரீ தொகுப்பை வாங்குவதன் மூலம் எண்கோண வடிவிலான மெஷ் க்ரில்-ஐ பெறலாம். அதேபோல் பின்பக்கத்தில் எக்ஸாஸ்ட் குழாய் க்ரோமில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும்.

இவற்றுடன் பக்கவாட்டின் அடிப்பகுதியில் கார்னிஷ் மற்றும் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லரையும் பின்பக்கத்தில் இந்த ஆக்ஸஸரீ தொகுப்பில் வாங்கலாம். கேஷூவல் ஸ்டைல் தொகுப்பில் கேஷுவலான தோற்றத்திற்காக காரை சுற்றிலும் வழங்கப்படும் கண்ணை கவரும் க்ரோமிற்கு மாற்றாக காப்பர் பாகங்கள் வழங்கப்படும்.

இந்த ஆக்ஸஸரீ தொகுப்பில் பெரும்பான்மையான பாகங்கள் அர்பன் ஸ்டைல் தொகுப்பில் வழங்கப்படுபவையாக தான் உள்ளன. அதாவது, அதில் க்ரோம் துண்டுகளுடன் வழங்கப்படுபவை இதில் காப்பர் துண்டுகளுடன் வழங்கப்படும் அவ்வளவுதான்.

அவற்றில் இருந்து கூடுதலாக புதிய பக்கவாட்டு கண்ணாடிகளின் மூடிகளை கேஷுவல் ஸ்டைல் தொகுப்பில் பெறலாம். இந்த ஆக்ஸஸரீகளுக்கான விலைகள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. அவற்றை அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.