2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

புதிய டிசைன் தத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2022 ஹோண்டா சிவிக் காரின் உட்புற தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

2022 சிவிக் காரை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த 2022 செடான் காரின் உட்புறம் ஸ்கெட்ச் படம் ஒன்றின் மூலமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

இதன் உட்புறத்தை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட புதிய டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் தான் இனி எதிர்காலத்தில் வெளிவரும் கார்களும் கொண்டிருக்கும் என ஹோண்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

இந்த புதிய கான்செப்ட்டின் அடிப்படையில் உட்புற கேபினை பெற்ற முதல் கார் 2022 சிவிக் ஆகும். தங்களது ஆரம்ப காலக்கட்ட வாகனங்களின் கிளாசிக் மனித-மைய டிசைன்களினால் ஈர்க்கப்பட்டு 2022 சிவிக் காரின் உட்புறத்தை வடிவமைத்துள்ளதாக கூறும் ஹோண்டா, இது பிராண்டின் எளிமையான பயண அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

ஹோண்டாவின் புதிய டிசைன் தத்துவம் "ஆட்களுக்கு அதிகம்/ மெஷின்களுக்கு குறைவு" என்கிற விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் புதிய சிவிக் காரின் கேபினில் இட வசதி இயந்திர பாகங்களை காட்டிலும் பயணிக்களுக்கே அதிகமாக இருக்கும்.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

மேலும் இந்த புதிய உட்புற கேபினிற்கான கான்செப்ட் ஆனது டேஸ்போர்டின் உயரத்தை குறைத்து பயணிகள் சாலைகளையும், காரை சுற்றியுள்ள சூழலையும் தெளிவாக, விசாலமாக காணுவதற்கும் உதவியாக உள்ளது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

இதுகுறித்து அமெரிக்க ஹோண்டா நிறுவனத்தின் உட்புற டிசைனிற்கான முதன்மை வடிவமைப்பாளர் ஜோனாதன் நார்மன் கருத்து தெரிவிக்கையில், எளிமையான வடிவமைப்பிற்கு ஒரு வலுவான தத்துவம் மட்டுமில்லாமல் பயனர் அனுபவத்தை நோக்கிய ஒரு ஒழுக்கமும் தேவைப்படுகிறது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

பழைய ஹோண்டா வாகனங்களின் எளிய, மனிதனை மையமாக கொண்ட வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டதாக மற்ற கார் பிராண்ட்களின் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளதை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது நாங்களும் அவர்களது வழியிலேயே சென்றுள்ளோம் என கூறினார்.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள சிவிக், அதன் 11வது தலைமுறையாகும். ஏற்கனவே கூறியதுதான், 2022 சிவிக்கின் வெளிப்பக்கத்தை சில வாரங்களுக்கு முன்பே ஹோண்டா வெளிக்காட்டிவிட்டது. முன்பக்கத்தில் இந்த கார் கூர்மையான முனைகளை பெற்றுள்ளது.

2022 சிவிக் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்குமாம்!! புதிய கான்செப்ட்டில் வடிவமைத்துள்ள ஹோண்டா!

அதேபோல் முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் மற்றும் பம்பரின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை சிவிக் செடான் கார் இந்திய ஷோரூம்களுக்கு வருகை தருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில் வரவேற்பு குறைவாக கிடைப்பதால் சிவிக் கார்களின் விற்பனையை ஏற்கனவே இந்தியாவில் ஹோண்டா நிறுத்திவிட்டது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
2022 Honda Civic interior revealed, to have a new design philosophy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X