உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

உலகளாவிய NCAP சோதனைக்கு கார் எவ்வாறு அனுப்பப்படுகின்றன? இந்த சோதனைகளுக்கான செலவு தொகை எங்கிருந்து பெறப்படுகிறது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதிலினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

ஒரு காலத்தில் சீட்பெல்ட்டை தவிர்த்து எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இல்லாமல் கூட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது பயணிகள் கார்களில் 6 காற்றுப்பைகளை கட்டாயமாக வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் யோசிக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

ஆனால் ஒரு நேரத்தில் (மிகவும் பின்னோக்கி சென்றுவிட வேண்டாம், 10, 11 வருடங்களுக்கு முன்பு கூட) ஒரு காற்றுப்பையும் இல்லாமல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது எல்லாம் மாறிவிட்டது. அந்த காலத்தில் காரின் விலைகளையும், அது வழங்கக்கூடிய மைலேஜையுமே நம் இந்தியர்கள் பெரிதாக பார்த்தனர்.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

இப்போது இவற்றுடன் சேர்த்து காரின் பாதுகாப்பு விஷயங்களையும் ஆராய ஆரம்பித்துவிட்டனர். இதனால் உலகளாவிய NCAP மோதல் சோதனையில் கார்கள் எத்தகைய மதிப்பெண்களை பெறுகின்றன என்பது கடந்த சில வருடங்களாக ஆட்டோமொபைல் துறையில் முக்கியமாகிவிட்டது.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

மோதல் சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அளவுருக்களின் அளவீடு ஆகியவை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்படுவதால், கார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்களால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு தனியார், சுயாதீன அமைப்பு என்பதால், இதன் செயல்பாடு மற்றும் நோக்கங்கள் குறித்து சந்தேகங்கள் இருக்கலாம்.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

சிலர் நேரடியாகவே சமூக வலைத்தள பக்கங்களில், NCAP செயலிழப்பு சோதனைகளை மேற்கொள்வதற்கான அணுகுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதா என வினவியுள்ளனர். இந்த சந்தேகங்களையும், கேள்விகளையும் தீர்க்க, வெளிப்படைத்தன்மையை கொண்டுவர, உலகளாவிய NCAP தன்னார்வ சோதனை நடைமுறையின் கீழ் கார்கள் எவ்வாறு சோதனைக்காக வழங்கப்படுகின்றன என்பதற்கான முழுமையான செயல்முறைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

இதன்படி, வாகன உற்பத்தியாளர்களிடம் இருந்து கோரிக்கைகளை பெறுவதில் இருந்தே இந்த மோதல் சோதனைகளுக்கான செயல்முறைகள் அனைத்தும் துவங்குகின்றன. இது முழுக்க முழுக்க தன்னார்வ செயல்முறையாகும். அதாவது தங்களது கார்களை சோதனை செய்து அதன் மூலம் அந்த காரின் பாதுகாப்பை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த விருப்பப்படும் நிறுவனங்கள் தாமாக முன்வந்து கோரிக்கையை இந்த தனியார் அமைப்பிடம் வைக்கின்றன.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

கார்கள் உலகளாவிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்கிற நிபந்தனை எதுவும் கிடையாது. சோதனைக்கு ஒரு காரினை அதன் தயாரிப்பு நிறுவனம் தான் வழங்குகிறது. ஆனால் அந்த காரின் மாதிரிகளுள் ஒன்றை GNCAP (உலகளாவிய NCAP) தான் தேர்வு செய்கிறது. அப்போது தான் குளறுப்படிகளை தவிர்க்க முடியும்.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

சோதனைக்கு கொண்டுவரப்படும் கார் மாடல் ஏற்கனவே விற்பனையில் இருந்தால், அதன் ஒரு மாதிரி எந்தவொரு டீலரிடம் இருந்தும் தோராயமாக பெறும் உரிமை GNCAP அமைப்பிற்கு உள்ளது. விற்பனைக்கு இன்னும் கொண்டுவரப்படாத கார் என்றால், தொழிற்சாலையில் இருந்து இதேபோன்று தோராயமாக தேர்வு செய்யப்படுமாம்.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

தயாரிப்பு நிறுவனத்தையே தேர்வு செய்ய அனுமதித்தால், அது சில மாற்றங்களை அந்த குறிப்பிட்ட ஒரு மாதிரியில் மட்டும் கொண்டுவந்து சோதனைக்கு அனுப்ப நேரிடலாம். மாதிரி தேர்வு செய்யப்பட்ட பின், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதி முன்னிலையில் விபத்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அந்த கார் விரிவான தொழிற்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இதற்கு பிறகு இதுதொடர்பான அறிக்கைகள் உருவாக்கப்பட்டு அவை உற்பத்தி நிறுவனத்துடன் பகிரப்படுகின்றன. மோதல் சோதனை முடிவுகளை விவாதிக உலகளாவிய NCAP பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு சந்திப்பை நடத்துகிறது.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

இந்த சந்திப்பிற்கு பிறகு அறிக்கைகள் உலகளாவிய NCAP-இன் தகவல் தொடர்பு சேனல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஒரு நிறுவனம் தனது ஆட்டோமொபைல் தனது காரை இந்த சோதனையில் உட்படுத்தாத போது, அந்த கார் எவ்வாறு உலகளாவிய மோதல் சோதனைகளில் ஈடுப்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.

உலகளாவிய NCAP சோதனை என்றால் என்ன? இதற்கான செலவுகளை ஏற்பது யார்? விரிவான பதில்கள்!!

உதாரணமாக, மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த காலங்களில் தங்களது கார்களை GNCAP சோதனைகளில் உட்படுத்த விரும்பவில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் அதன்பின் சில மாருதி கார்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. அவை பெற்ற மதிப்பெண்களையும், உலகளாவிய NCAP சோதனைகளில் மற்ற நிறுவனங்களின் கார்கள் பெற்றுள்ள மதிப்பெண்களையும் மேலுள்ள அட்டவணையில் காணலாம்.

Most Read Articles

English summary
Global NCAP Reveals How They Get Cars For Testing And Who Pays The Bill.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X