மின்சாரம் தீர்ந்த கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

காரின் பேட்டரி வேலை செய்யாதபோது என்ன வேண்டும் மற்றும் அதனை எப்படி சார்ஜ் செய்வது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அல்லது பகுதி நேர ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ராஜஸ்தான், உபி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுகள் அதிகம் காணப்படுவதால் அங்கு முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

இதனால், அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி அவர்களின் வாகனங்களும் இயக்கமற்ற நிலையில் தனித்துவிடப்பட்டுள்ளன. இந்த மாதிரியான நிலை வாகனங்களில் இருக்கும் பேட்டரியை வற்றி போக செய்யும்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

அதாவது, மின்சார திறனே இல்லாத நிலையில் பேட்டரிகள் தென்படும். இந்த மாதிரியான நேரத்தில் காரை ஸ்டார்ட் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆகையால், இந்த மாதிரியான நேரங்களை எப்படி கையாள்வது என்பதற்கான டிப்ஸ்களையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

அதாவது, முழுமையாக வற்றிக் கிடக்கும் பேட்டரியை எப்படி சார்ஜ் செய்வது என்பது மூன்று முக்கிய வழிமுறைகளை வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

பிற காரிடம் இருந்து சார்ஜ் பெறலாம் (Car to car jumpstart)

நம்முடைய காரின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் அதனை உடனடியாக பூஸ்ட் செய்ய மற்றொரு காரின் உதவியை நாடுவதே மிக சிறந்த மற்றும் சுலபமான வழியாகும். ஆமாங்க, பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை ஸ்டார்ட் செய்வது கடினம். ஆகையால், மெக்கானிக்கை அழைத்து வந்தோ அல்லது டோவ் செய்து சென்றோ, சார்ஜ் செய்த பின்னரே காரை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

இதனைத் தவிர்க்க வேண்டுமானால் உங்களிடத்தில் ஜம்பர் கேபிள்கள் இருப்பது அவசியம். இது மற்றொரு காரின் பேட்டரியில் இருந்து உங்கள் காரின் பேட்டரிக்கு சார்ஜை ஏற்ற அல்லது அப்போதைக்கு காரை ஸ்டார்ட் செய்ய உதவும். காரை ஒரு முறை ஸ்டார்ட் செய்து இயக்க தொடங்கிவிட்டால் அதன் பின்னர் பேட்டரி தானாக சார்ஜேறிவிடும்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

போர்ட்டபிள் ஜம்ப் ஸ்டார்டர் - பவர் பேங்க் (Portable Jump Starter)

போர்ட்டபிள் ஜம்பர் ஸ்டார்டரானது ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் செய்ய உதவும் பவர் பேங்கைப் போல் செயல்படும். இது ஆன்லைன் தளம் அல்லது கார் அக்ஸசெரீஸ்கள் விற்பனையகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த கருவியைக் கொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் சார்ஜ் தீரும் வரை பயன்படுத்தி காரை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

காரை ஸ்டார்ட் செய்வதற்கான திறன் இந்த கருவியில் இருக்கும். இதனை அவ்வப்போது சார்ஜ் செய்வதன் மூலம் மீண்டும் மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். காரில் பேட்டரியே இல்லை என்றாலும் இதைக் கொண்ட ஸ்டார்ட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

ட்ரிக்கில் சார்ஜர் (Trickle Charger)

மேலே பார்த்த இரண்டும் உங்களால் வீட்டில் இருந்து செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், தற்போது நாம் பார்க்க இருக்கும் வழிமுறை மெக்கானிக்கிடம் சென்றால் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதேசமயம், உங்களிடம் அதிகம் பணம் இருக்கும் என்றால் இந்த கருவியை வாங்கி வைத்துக் கொள்ள முடியும். ஆனால், நாம் வைத்திருக்கும் ஓரிரு கார்களுக்கு இக்கருவியை பிரத்யேகமாக கொள்முதல் செய்வது வீண் செலவு.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

ட்ரிக்கில் சார்ஜர், இது மிக பொருமையாக பேட்டரியைச் சார்ஜ் செய்ய உதவும். அதாவது, அதிக அழுத்தம் இல்லாமல் பேட்டரியை சார்ஜ் செய்யக் கூடியது. 80 சதவீதம் சார்ஜை ஏற்றும். ஓர் கார் பேட்டரி முழுமையாக சார்ஜை இழந்திருக்குமானால், இதைக் கொண்டே மெக்கானிக்குகள் சார்ஜ் செய்வர்.

மின்சாரம் தீர்ந்து கார் பேட்டரியில் சுலபமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி?.. இதோ 3எளிய வழிகள்... இத எந்த மெக்கானிக்கும் சொல்ல மாட்டாங்க!

அதேசமயம், உங்கள் காரில் லித்தியம்-அயன் போன்ற பேட்டரிகள் இருந்தால் இந்த ட்ரிக்கில் சார்ஜர் கருவி தேவைப்படாது. ஏனெனில், லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிக-வேகத்தில் சார்ஜாக கூடியவை என்பதால், ஒரு முறை காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஓட்ட ஆரம்பித்தாலே போதும் அது சார்ஜிங் வேலை தொடங்கிவிடும். இவ்வாறு செய்தும் சார்ஜாகவில்லை என்றால் நிச்சயம் பேட்டரி மெக்கானிக்கைக் காண்பது சிறந்தது.

Most Read Articles
English summary
How To Charge Your Drained Car Battery. Read In Tamil.
Story first published: Friday, May 21, 2021, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X