Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 10 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் பெட்ரோல் வாங்காதீர்கள்... பலருக்கு இதற்கான காரணம் தெரிவதில்லை!!
கோடை காலம் துவங்கிவிட்டது. இன்னும் சில வாரங்களுக்கு வெயில் வாட்டி வதைக்கவுள்ளது. இப்போதே பெரும்பாலானோர் மதிய நேரங்களில் பயணத்தை தவிர்க்கின்றனர். ஆனால் சிலருக்கோ மதிய நேரங்களிலும் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய காட்டாயம் இருக்கும்.
அத்தகையவர்களுக்காக, கோடை காலத்தில் பயணம் செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

- வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் இரயிலிலோ, பேருந்திலோ அல்லது கார்களிலோ பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் கட்டாயம் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள்.

ஏனெனில் வெயில் காலத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவித்துகின்றனர். அதிலும் பயணங்களின் போது கூடுதலாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தவிர்பதற்காக குறைந்தது ஒரு தண்ணீர் பாட்டிலாவது எடுத்து செல்லுங்கள்.

- புற-ஊதா ஒளி மனித உடலின் தோல், கண்களை பாதிப்பது மட்டுமில்லாமல் தோல் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடியது. இதன் காரணமாகவே, புற-ஊதா ஒளியை உண்டாக்கக்கூடிய டிண்ட் கார்களின் கண்ணாடிகளில் வழங்கப்படுவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

இருப்பினும் டிண்ட் எனப்படும் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளை கொண்ட சில கார்களை இப்போதும் பார்க்க முடிகிறது. அவ்வாறான வாகனங்களை தவிர்த்து விடுங்கள். அல்லது ஜன்னல் கண்ணாடியை முழுவதுமாக திறந்து கொள்ளுங்கள்.

- வெப்பம் மிகுந்த சூழலில் பயணிக்கும்போது மனித உடல் ஏகப்பட்ட ஆற்றல்களை இழப்பது இயல்பானது. இதனால் இந்த ஆற்றல் இழப்பு பெரிய பிரச்சனையில் சென்று முடியாமல் இருக்க, நோயாளிகள் தகுந்த மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைத்திருப்பது அவசியமாகும்.

- அதிக சூடு மனித உடலை பாதிப்பது மட்டுமின்றி பயணத்தின்போது எடுத்து செல்லப்படும் உணவுகள், காய்கறிகள் & பழங்கள் உள்ளிட்டவற்றையும் பாதிக்க செய்கிறது. எனவே இவற்றை ஒரு பையில் போட்டு வாகனத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் காற்று-குளிர்விப்பான் க்ளோவ் பாக்ஸ் போன்ற பகுதிகளில் வைத்து விடலாம்.

- வாகனங்கள் எப்போது பழுதாகும் என்பதை யூகிப்பது கடினமாகும். இதனால் சொந்த வாகனம் என்றால், தொலைத்தூர பயணங்களின் போது அவசரகால கருவிகளையும் கூடயே எடுத்து செல்லுங்கள்.

ஏனென்றால் மற்ற நேரங்களில் கூட மெக்கானிக் வரும்வரை காத்திருக்கலாம். ஆனால் கோடை காலத்தில் மதிய நேரத்தில் கார் பழுதாக நேர்த்தால் அன்றைய நாளே வீணாகி போய்விடும்.

- நிழலில் நிறுத்தப்படாத கார்களின் உள்ளே, ஜன்னல்கள் திறந்திருப்பினும் வெப்பநிலை சுமார் 55- 60 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 15- 20 நிமிடங்களில் 12 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் பார்க் செய்யப்படும் காருக்கு உள்ளே குழந்தைகள் அல்லது செல்ல பிராணிகளை விட்டு செல்லாதீர்கள்.

- ஏசி பயன்பாட்டினால் காரின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் வெயில் காலத்தில் ஏசி-ஐ உபயோகிக்காமல் பயணிப்பது என்பது நிச்சயம் முடியாத காரியம். எனவே உட்புற கேபினில் உள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை அகற்றி ஏசி-க்கு அதிக சுமையை கொடுக்காமல், மைலேஜ் குறைவதை சிறிது தவிர்க்கலாம்.

- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எப்போதும் தவறு. அதிலும் கோடை காலத்தில் உடலின் நீரிழப்பை அது அதிகரிக்க செய்யும். தொலைத்தூர பயணங்கள் என்றால், கடந்த 24 மணிநேரங்கள் மது அருந்தாமல் இருந்து வாகனத்தை ஓட்டுவதே நல்லது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கோடை நாட்களில் மதிய நேரங்களில் வாகனத்தில் பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருள்களை நிரப்புவதை தவிர்க்க பாருங்கள். எரிபொருளினால் எதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், மிக முக்கிய காரணமாக அதிக வெப்பநிலையில் பெட்ரோல் வாங்கும்போது அதன் அளவு மற்ற நேரங்களை காட்டிலும் குறைவாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிக விலையில் குறைவான பெட்ரோலை வாங்க நேரிடும்.