மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

விற்பனையில் இருந்து நீக்கப்பட்ட மிகக் குறைந்த நாளிலேயே மீண்டும் புதிய கார் விற்பனைப் பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா இ டீசல் கார் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

ஹூண்டாய் நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக காரான க்ரெட்டாவின் இ டீசல் வேரியண்டை மிக சமீபத்தில் விற்பனையில் நீக்கியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து இ டீசல் வேரியண்ட் பற்றிய அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டன. இதனால் காரை புக் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

இந்த நிலையில் மீண்டும் இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமோகமான புக்கிங்கைப் பெற்றதன் காரணத்தினாலயே அண்மையில் இக்காரை விற்பனைப் பட்டியலில் இருந்து நிறுவனம் நீக்கியிருந்தது. குறிப்பாக, காத்திருப்பு காலம் மாதக் கணக்கில் நீடித்ததே இந்த தடைக்கு முக்கிய காரணம் ஆகும். அதேசமயம், கால நிலையிலும் பலர் இக்கார்குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

இந்த காரணத்திற்காகவே மீண்டும் இக்கார் பற்றிய தகவல் மீண்டும் வலை தளத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் டாப் நம்பர் 1 விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் க்ரெட்டா காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் இக்காரின் பக்கம் இருக்கும் அமோகமான வரவேற்பைத் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இதன் புதிய தலைமுறை காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

இதன் விற்பனை நலிவடையத் தொடங்கியவேலையிலேயே இந்த புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் வருகையே க்ரெட்டா எஸ்யூவியின் புக்கிங்கை தூக்கிப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காருக்கான காத்திருப்பு காலம் அமைந்துள்ளது. நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில் க்ரெட்டாவின் குறிப்பிட்ட சில வேரியண்டைப் பெற 1 வருடம் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

மாநிலத்திற்கு மாநிலம் இந்த காத்திருப்பு காலம் வேறுபட்டு காணப்படுகின்றது. அந்தவகையில், நாட்டின் சில பகுதிகளில் 10 மாதங்கள் என்ற குறைந்த காத்திருப்பு காலமும் நீடித்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இ டீசல் வேரியண்டின் விற்பனை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றது.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

1.5 சிஆர்டிஐ எம்டி இ எனும் பெயரில் கிடைக்கும் இந்த வேரியண்ட்டிற்கு ரூ. 10.31 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, டீசல் எஞ்ஜின் தேர்விலேயே உயர்நிலை வேரியண்டாக இருக்கும் மற்றொரு கார் 17,48,800 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார்களில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் கொண்ட டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

இது 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோன்று, 1.5 நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் ஹூண்டாய் க்ரெட்டா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மீண்டும் விற்பனை பட்டியலில் இணைந்த க்ரெட்டா இ டீசல் தேர்வு... ஆனா ரொம்ப மாசம் காத்திருக்கணும்...

இந்த கார் 115 பிஎஸ் மற்றும் 144 என்எம் திறன்களை வெளியேற்றும். இத்துடன், 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 140 பிஎஸ் மற்றும் 242 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலே கூறப்பட்ட விலை இக்காரின் விலை கிடையாது. ஹூண்டாய் க்ரெட்டா ரூ. 9.99 என்ற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles

English summary
Hyundai Added Creta E Diesel Variant Again in Official Website; Here is Waiting Period Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X