Just In
- 49 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 51 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
7-இருக்கை க்ரெட்டா கார் மீண்டும் பொது சாலையில் சோதனை!! இரகசியமாக ஈடுப்பட்டுவரும் ஹூண்டாய்!
அல்கஸார் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள 7-இருக்கை க்ரெட்டா கார் ஒன்றின் சோதனை ஓட்ட ஸ்பை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடலாக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டாவின் புதிய தலைமுறை கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறு கடினமான சூழலின்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், விற்பனையில் ஜொலித்துவரும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனை அல்கஸார் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவர ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பிரிவில் தற்சமயம் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் சமீபத்தில் அறிமுகமான டாடா சஃபாரி கார்கள் மட்டும் தான் உள்ளன. இதில் ஹெக்டர் ப்ளஸும் கடந்த ஆண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி500-இன் புதிய தலைமுறை தயாரிப்பு பணிகளில் உள்ளது.

ஆனால் அல்கஸாரின் அறிமுகம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை. சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் மட்டும்தான் சமீப காலமாக நமக்கு கிடைத்து வருகின்றன.
இந்த வகையில் இந்த சோதனை ஓட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில் டாடா ஹெரியரில் இருந்து சஃபாரி பெற்றப்பட்ட அதே பாணியில்தான் க்ரெட்டாவில் இருந்து புதிய அல்கஸார் பெறப்பட்டுள்ளது.

கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசை வழங்கப்படுவதால் காரின் நீளம் அதிகரிப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் மேற்கூரை காரின் பின்பக்க இறுதி வரை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரின் C-பில்லரின் வடிவம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார்பீம் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த வீடியோ மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்கள் பெரும்பான்மையானவற்றில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் இரு-முனை எக்ஸாஸ்ட் குழாய்கள் உடன் அல்கஸார் சோதனை காரை பார்க்க முடிகிறது.

காரின் முன்பக்கத்தில் பிளவுப்பட்ட வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு க்ரெட்டா உடன் ஒத்து காணப்பட்டாலும், அந்த ஐந்து-இருக்கை எஸ்யூவி காரில் இருந்து வேறுப்பட்ட க்ரில் அமைப்பை அல்கஸார் பெற்றுவரலாம். பிரிவில் உள்ள மற்ற கார்களை போல் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ள அல்கஸாரில் இரண்டாவது இருக்கை வரிசையில் கேப்டன் இருக்கைகள் இரு-நிறங்களில் வழங்கப்பட உள்ளதை கடந்த வாரத்தில் வெளியாகி இருந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டி இருந்தன.

என்ஜின் தேர்வை பொறுத்தவரையில் க்ரெட்டாவின் வழக்கமான 3 என்ஜின் தேர்வுகள் தான் அல்கஸாரிலும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று என்ஜின் தேர்வுகளில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெட்டட் பெட்ரோல் & டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்பவை அடங்குகின்றன.