கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

கொரோனோ பரவல் தீவிரமாகி உள்ளதையடுத்து, புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

ஹூண்டாய் க்ரெட்டா அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இந்த புதிய அல்கஸார் எஸ்யூவி பொது பார்வைக்கு வெளியிடப்பட்டது. ஆனால், பொது பார்வைக்கு இன்னமும் கொண்டு வரப்படவில்லை.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

க்ரெட்டாவைவிட டிசைனிலும், வசதிகளிலும் பிரிமீயம் மாடலாக வருவதால், வாடிக்கையாளர்கள் பலர் இதன் வரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

ஆனால், தற்போது புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட 150 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தை புதிய அல்கஸார் எஸ்யூவி பெற்றுள்ளது. இதனால், மூன்று வரிசை இருக்கைகள் சிறப்பாக அமைந்துள்ளது.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் வழங்கப்படும். இதில், 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 சீட்டர் மாடலில் நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை வழங்கப்பட்டு இருக்கும்.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 157 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் இடம்பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியும் இடம்பெறுகிறது. பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் ஆகியவை வழங்கப்படும்.

 கொரோனா எதிரொலி... புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளிப் போகிறது

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Via- ACI

Most Read Articles

English summary
According to reports, Hyundai has delayed the all new Alcazar 7 seater SUV in India by late May 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X