டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் 6 மற்றும் 7 சீட்டர் எஸ்யூவி காரான அல்கஸார் இந்தியாவில் இன்று (ஜூன் 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் உள்ள கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில், இந்த புதிய மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய சந்தையில் புதிய டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

மேலும் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு அல்கஸார் எஸ்யூவியை அனுப்பி வைக்கும் பணிகளையும் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரின் நீளம் 4,500 மிமீ ஆகவும், அகலம் 1,790 மிமீ ஆகவும், உயரம் 1,675 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த எஸ்யூவி காரின் வீல் பேஸ் நீளம் 2,760 மிமீ ஆகும்.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

அதாவது ஹூண்டாய் கிரெட்டாவை விட அல்கஸார் எஸ்யூவியின் வீல் பேஸ் 150 மிமீ நீளமானது. இதனால் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரின் கேபினில் விசாலமான இடவசதி உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகளை ஹூண்டாய் அல்கஸார் பெற்றுள்ளது.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 157 ஹெச்பி பவரையும், 191 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மறுபக்கம் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 113 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்களும் வெளியாகியுள்ளன. இதன்படி பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 14.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். அதே நேரத்தில் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 14.5 கிலோ மீட்டர் மைலேஜை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

மறுபக்கம் இந்த காரின் டீசல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 18.1 கிலோ மீட்டர் மைலேஜையும், டீசல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.4 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், அல்கஸார் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூ லிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்மார்ட் பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. மேலும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் ஹூண்டாய் நிறுவனம் புதிய அல்கஸார் எஸ்யூவி காரில் வழங்கியுள்ளது.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

பாதுகாப்பை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான வசதிகளை ஹூண்டாய் அல்கஸார் பெற்றுள்ளது.

டாடா சஃபாரிக்கு கடும் சவால்... ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோ தெரியுமா?

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 16.30 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி காரின் விரிவான விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம். இந்த காரின் டெலிவரி பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படவுள்ளது.

6-Seat Model Prices
Alcazar Variants P 2.0 MT P 2.0 AT D 1.5 MT D 1.5 AT
Prestige Rs 16.45 Lakh Rs 17.93 Lakh Rs 16.68 Lakh NA
Platinum NA Rs 19.55 Lakh NA Rs 19.78 Lakh
Signature Rs 18.70 Lakh Rs 19.84 Lakh Rs 18.93 Lakh Rs 19.99 Lakh
7-Seat Model Prices
Alcazar Variants P 2.0 MT P 2.0 AT D 1.5 MT D 1.5 AT
Prestige Rs 16.30 Lakh NA Rs 16.53 Lakh Rs 18.01 Lakh
Platinum Rs 18.22 Lakh NA Rs 18.45 Lakh NA
Most Read Articles

English summary
Hyundai Alcazar Launched In India: Check All Details Here. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X