ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி இன்று விற்பனைக்கு வந்துள்ள நிலையில், விலை அறிவிப்புக்கு முன்னதாகவே கணிசமான புக்கிங்குகளை பெற்றிருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற க்ரெட்டா எஸ்யூவியின் அடிப்படையில், அல்கஸார் என்ற புதிய எஸ்யூவி மாடலை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வந்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்களின் கனவு வாகனமாக மாறியிருந்தது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

இதனால், இந்த எஸ்யூவியின் அறிமுக நாளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்தனர். கடந்த வாரம் புக்கிங் துவங்கப்பட்ட நிலையில், பலரும் இந்த எஸ்யூவியை ஆர்வமுடம் புக்கிங் செய்துள்ளனர்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

இந்த நிலையில், புதிய அல்கஸார் எஸ்யூவி இருக்கை வசதி மற்றும் வசதிகளை பொறுத்து இன்று ரூ.16.30 லட்சம் முதல்ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எஸ்யூவி எதிர்பார்ப்புகளை விட கூடுதலான ஆரம்ப விலையில் வந்துள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

இந்த நிலையில், இன்று விலை அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே கையில் கணிசமான புக்கிங்குகளை இந்த எஸ்யூவி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ஆம், அதாவது 4,000 பேர் இந்த எஸ்யூவியை இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

இதில், 45 சதவீதம் பேர் பெட்ரோல் வேரியண்ட்டுகளையும், 55 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டுகளையும் புக்கிங் செய்துள்ளனர். அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பிறகு டீசல் எஞ்சினுக்கு மவுசு இல்லை என்ற கூற்றை பொய்யாக்குவது போல இந்த புக்கிங் எண்ணிக்கை அமைந்துள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு சரி சமமான புக்கிங் கிடைத்துள்ளது. அதாவது, 50:50க்கு என்ற விகிதத்தில் இதுவரை புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

தற்போதைய நிலையில் புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் புக்கிங் அடிப்படையில் 4 முதல் 6 வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நிலவுகிறது. ஆனால், இன்று விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பொறுத்தே புக்கிங் எண்ணிக்கை அமையும்.இதன் பிரிமீயம் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தால், நிச்சயம் புக்கிங் எண்ணிக்கை வரும் நாட்களில் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால், வெயிட்டிங் பீரியடும் அதிகரிக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

மேலும், புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். டீலர்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட்டு உள்ளது. எனவே, கடந்த வாரம் முதல் புக்கிங் செய்தவர்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக டெலிவிரி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 191 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமே்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவிக்கு கணிசமான புக்கிங்... வெயிட்டிங் பீரியட் விபரமும் வெளியானது

மேலும், எஞ்சின், கியர்பாக்ஸ், வசதிகளை பொறுத்து பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், சிக்னேச்சர் வேரியண்ட் ஹூண்டாய் நிறுவனத்தின் சிக்னேச்சர் என்ற பிரிமீயம் ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai has revealed that the all-new Alcazar SUV has received 4,000 bookings.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X