3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

ஹூண்டாய் அல்கஸார் காரில் வழங்கப்பட உள்ள அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

விற்பனையில் சக்கைப்போடு போட்டுவரும் க்ரெட்டாவின் 7-இருக்கை வெர்சனான அல்கஸார் வருகிற ஜூன் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த எஸ்யூவி காரை பற்றி விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தது.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

இந்த நிலையில் இந்த ஹூண்டாய் 7-இருக்கை காரை பற்றிய கூடுதல் விபரங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ளன. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி கார்களுக்கு போட்டியாக வெளிவரும் அல்கஸார் பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் (O), பிளாட்டினம், பிளாட்டினம் (O), சிக்னேச்சர் மற்றும் சிக்னேச்சர் (O) என்ற 6 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

இதில் பிரெஸ்டிஜ் (O), பிளாட்டினம் (O) மற்றும் சிக்னேச்சர் (O) வேரியண்ட்கள் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். பெயிண்ட் தேர்வுகளாக 6 ஒற்றை நிறத்தேர்வுகளும், இரு இரட்டை-நிற தேர்வுகளும் வழங்கப்பட உள்ளன.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

இந்த 6 ஒற்றை நிறங்களில் டைகா ப்ரவுன், போலார் வெள்ளை, டைகூன் சில்வர், பாண்டோம் கருப்பு, ஸ்டாரி நைட் மற்றும் டைட்டான் க்ரே என்பையும், இரட்டை பெயிண்ட் நிறங்களில் பாண்டோம் கருப்பு உடன் போலார் வெள்ளை, பாண்டோம் கருப்பு உடன் டைட்டானியம் சில்வர் என்பவையும் அடங்குகின்றன.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

அல்கஸாரில் 2,670மிமீ நீளத்தில் வீல்பேஸ் வழங்கப்பட உள்ளது. க்ரெட்டாவின் வீல்பேஸ் நீளம் எனப்படும் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,610மிமீ ஆகும். இதன் மூலம் பிரிவிலேயே நீண்ட வீல்பேஸ் கொண்ட காராக அல்கஸார் விளங்கவுள்ளது.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

இதனால் மூன்றாவது இருக்கை வரிசை அமைக்கப்பட்ட பின்னரும் கேபினின் பரப்பளவும் நன்கு விசாலமானதாக இருக்கும். குறிப்பாக இரண்டாவது இருக்கை வரிசை நன்கு கால்களை நீட்டி அமரும் வகையில் கூடுதல் இட வசதியுடன் இருக்கும்.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன. இதில் 2.0 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 159 பிஎச்பி மற்றும் 192 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக இருக்கும்.

3 டிரைவிங் மோட்களுடன் தயாராகும் ஹூண்டாய் அல்கஸார்!! விபரங்கள் இணையத்தில் கசிந்தன

6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்பட உள்ள இந்த என்ஜின்களுடன் கம்ஃபர்ட், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்ற 3 ட்ரைவிங் மோட்களும், பனி, மணல் & சேறு என 3 வெவ்வேறு ட்ராக்‌ஷன் கண்ட்ரோல்களும் வழங்கப்பட உள்ளன.

Most Read Articles

English summary
Hyundai Alcazar brochure leaked ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X