Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் பெரிய பெட்ரோல் இன்ஜின்? விற்பனைக்கு வரும் முன்பாக வெளியே கசிந்த தகவல்...
ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரில் பெரிய பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனான அல்கஸார் எஸ்யூவி இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியில் உள்ள இன்ஜின் தேர்வுகள்தான், அல்கஸார் எஸ்யூவியிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரிய பெட்ரோல் இன்ஜின் தேர்வு ஒன்றையும் அல்கஸார் பெறலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டீம்-பிஎச்பி செய்தி வெளியிட்டுள்ளது. எலாண்ட்ரா மற்றும் டூஸான் ஆகிய கார்களில் வழங்கப்பட்டு வரும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் எஸ்யூவியில் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6200 ஆர்பிஎம்மில் 150 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 192 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

எலாண்ட்ரா மற்றும் டூஸான் ஆகிய இரண்டு கார்களிலும் இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் தற்போது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது 5 சீட்டர் எஸ்யூவிக்களின் 7 சீட்டர் வெர்ஷன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எம்ஜி ஹெக்டர் அடிப்படையில் உருவான எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா ஹாரியர் எஸ்யூவி அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனாக அல்கஸார் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி வரும் ஏப்ரல் 6ம் தேதி ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி வெளியிடப்படவுள்ளது. இதன்பின் வரும் மே மாதம், இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அல்கஸார் எஸ்யூவியின் டெலிவரி பணிகளை ஹூண்டாய் நிறுவனம் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் பொது பார்வைக்கே கொண்டு வரப்படாத நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு சில ஹூண்டாய் டீலர்ஷிப்களில் அல்கஸார் எஸ்யூவிக்கு தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவாக டெலிவரி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதால், ஒரு சில டீலர்கள் மட்டும் ரகசியமாக முன்பதிவு ஏற்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அல்கஸார் எஸ்யூவிக்கான முன்பதிவுகள் தொடர்பாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த புதிய எஸ்யூவி கார், ஹூண்டாய் கிரெட்டாவுடன் பல்வேறு வசதிகளை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீட்டர் மட்டுமல்லாது, 6 சீட்டர் மாடலிலும் ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்கு வரலாம். விற்பனைக்கு வந்தவுடன் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் புதிய டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அல்கஸார் போட்டியிடும்.