காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் புதிய கார் மாடல்களில் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. எஸ்யூவி மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவின் 7 சீட்டர் மாடல் என்பதால் இந்த காரை வாங்குவதற்கு இப்போதே பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

கொரோனாவால் புதிய அல்கஸார் எஸ்யூவியின் தள்ளி போடப்பட்டது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், இதற்கு மேல் தள்ளிப் போடக்கூடாது என்று ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

இதன்படி, வரும் 18ந் தேதி புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அடுத்த வாரம் இந்த புதிய மாடலின் விலை விபரம் வெளியிடப்பட உள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய அல்கஸார் எஸ்யூவி பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் 6 வேரியண்ட்டுகளிலும், 6 வண்ணத் தேர்வுகளிலும் வர இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவைவிட இந்த எஸ்யூவி கூடுதல் நீளம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, க்ரெட்டாவைவிட 150 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளத்தை பெற்றுள்ளதால், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் போதுமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். டிசைனில் எல்லோரையும் வெகுவாக கவரும் வகையில் இந்த எஸ்யூவி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உட்புறம் பழுப்பு - கருப்பு வண்ண பாகங்களுடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய அல்கஸார் எஸ்யூவியில் பெரிய தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், ஏர் பியூரிஃபயர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், போஸ் சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாய் நிறுவனத்தின் புளூலிங்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ள்ஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வர இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
According to reports, Hyundai is likely to launch Alcazar SUV in India on 18th June, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X