ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

7-இருக்கை ஹூண்டாய் அல்கஸார் காரின் முக்கிய அம்சங்களை வெளிகாட்டும் உட்புற ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இனி செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் அதன் 7-இருக்கை எஸ்யூவி காரின் பெயரை அல்கஸார் என சமீபத்தில் அறிவித்திருந்தது. ஏற்கனவே பல முறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்த இந்த கார் உலகளவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து-இருக்கை புதிய தலைமுறை க்ரெட்டாவின் அடிப்படையில் அல்காஸார் கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆட்டோகார் இந்தியா செய்திதளத்தின் மூலமாக இந்த 7-இருக்கை எஸ்யூவி காரின் முதல் உட்புற ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

6-இருக்கை மற்றும் 7-இருக்கை என இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ள அல்கஸார் 6-இருக்கை தேர்வில் கேப்டன் இருக்கையை மத்திய இருக்கை வரிசையிலும், 7-இருக்கையில் பெஞ்ச் இருக்கையையும் கொண்டுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

க்ரே மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் 6-இருக்கை தேர்வின் உட்புற கேபின் ஆர்ம்ரெஸ்ட்டில் கப் ஹோல்டர்களை கொண்டுள்ளதை இந்த ஸ்பை படங்களில் பார்க்கலாம். இதுமட்டுமின்றி பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி துளைகள், சேமிடப்பிடத்திற்கான அனுமதி மற்றும் வயர்இல்லா போன் சார்ஜர் உள்ளிட்டவையையும் கார் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

கூடுதலான மூன்றாவது இருக்கை வரிசையினால் அல்கஸார் வழக்கமான 5-இருக்கை க்ரெட்டாவை காட்டிலும் அதிக நீளத்துடன் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். இந்த ஸ்பை படங்களில் மூன்றாவது இருக்கை வரிசை பயணிக்களுக்கான கால் வைக்கும் பகுதி பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த படங்களை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

அதேபோல் மூன்றாவது இருக்கை வரிசையினால் காரின் பின்பகுதியின் தோற்றமும் மாற்றப்பட்டிருக்கலாம். விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 உடனான நேரடி மோதலுக்காக ரேடார் சார்ந்த உதவி மற்றும் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை அல்கஸாரில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

இவற்றுடன் தானியங்கி அவசரகால ப்ரேக்கை உள்ளடக்கிய ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் தொகுப்பு, ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியினை காட்டும் வசதி, ரிவர்ஸில் வரும்போது வேறொரு வாகனம் குறுக்காக வருவதை எச்சரிக்கும் வசதி, ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், இயங்கும் பாதையில் இருந்து வாகனம் விலகி செல்வதை ஓட்டுனருக்கு தெரியப்படுத்தும் வசதி உள்ளிட்டவற்றையும் இந்த 7-இருக்கை எஸ்யூவி கார் பெற்றுவரவுள்ளது.

ஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம்!! முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் டாடா சஃபாரி கார்களுக்கு போட்டியாக க்ரெட்டாவின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ற என்ஜின் தேர்வுகளை பெற்றுவரும் ஹூண்டாய் அல்கஸாரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.11.50 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai Alcazar SUV first interior photos
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X