ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவியின் ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு!

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவியின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவியின் ஸ்கெட்ச் படங்கள்!

இந்திய கார் மார்க்கெட்டில் சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், நடைமுறை பயன்பாட்டையும் மனதில் வைத்து, க்ரெட்டாவின் 7 சீட்டர் மாடலை ஹூண்டாய் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

அல்கஸார் என்று பெயரில் வர இருக்கும் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி வரும் ஏப்ரல் 6ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சூழலில், அல்கஸார் வருகை குறித்து வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தும் வகையில் டீசரை அண்மையில் வெளியிட்டது ஹூண்டாய்.

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி

இதைத்தொடர்ந்து, தற்போது அல்கஸார் எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில், ஸ்கெட்ச் படங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அல்கஸார் எஸ்யூவியானது மூன்று இருக்கை வரிசை கொண்ட 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸ்கெட்ச் படத்தில் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் நடு இருக்கை வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பது குறித்த படம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், நடுவரிசையில் பெஞ்ச் இருக்கை அமைப்புடைய மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த மாடலை எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார்

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ஏப்ரல் 6ந் தேதி ராஜஸ்தானில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியின் மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. ரூ.11.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி500, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி உள்ளிட்ட 7 சீட்டர் மாடல்களைவிட விலை குறைவான தேர்வாக இருக்கும் என்பதால், குறிப்பிடத்தக்க அளவிலான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hyundai has released official sketches of Alcazar SUV ahead of its launch in India.
Story first published: Tuesday, March 23, 2021, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X