ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

இந்த ஆண்டில் அறிமுகமாக உள்ள புதிய கார் மாடல்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாடலாக ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடலாக வர இருக்கும் இந்த கார் க்ரெட்டா அடிப்படையிலான மாடல் என்பது கூடுதல் சிறப்பாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், கொரோனா காரணமாக, இதன் அறிமுகம் தள்ளிப் போடப்பட்டு வரும் நிலையில், மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலை களமிறக்குவதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஹூண்டாய் தீவிரமாக இறங்கி உள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

இந்த நிலையில், ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி பற்றிய சில முக்கிய விபரங்கள் ரஷ்லேன் தளம் மூலமாக கசிந்துள்ளன. அதாவது, அல்கஸார் எத்தனை வேரியண்ட்டுகள் மற்றும் வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி சிக்னேச்சர், சிக்னேச்சர் ஆப்ஷனல், பிரஸ்டீஜ் ஆப்ஷனல், பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் ஆப்ஷனல் ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

இந்த வேரியண்ட்டுகள் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். சிக்னேச்சர், சிக்னேச்சர் ஆப்ஷனல் 6 சீட்டர் மாடலிலும், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் ஆப்ஷனல் வேரியண்ட்டுகள் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். அதேநேரத்தில், சிக்னேச்சர், பிரஸ்டீஜ் மற்றும் பிளாட்டினம் வேரியண்ட்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஆப்ஷனல் வேரியண்ட்டுகளில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி தைபூன் சில்வர், டைட்டன் க்ரே, டைகா பிரவுன், ஸ்டாரி நைட், போலார் ஒயிட் மற்றும் ஃபான்டம் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. மேலும், காக்னக் பிரவுன் என்ற இன்டீரியர் தீம் கொடுக்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

க்ரெட்டா அடிப்படையிலான மாடல் என்றாலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள், பெரிய கார் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. க்ரெட்டா எஸ்யூவியைவிட 150 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டுள்ளது அல்கஸார். இந்த கார் 2,760 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாக வர இருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 157 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் அல்கஸார் வேரியண்ட்டுகள், வண்ணத் தேர்வுகள் விபரம் கசிந்தது!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி ரூ.12 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி மற்றும் விரைவில் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai will be launching the much-awaited Alacazar SUV in the coming weeks in India. The Alcazar will be globally premiered in India at the time of its launch. Ahead of its India launch, the variant and colour options have been leaked.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X