ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கஸார் 7 சீட்டர் எஸ்யூவி இந்தியர் கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும் வெற்றியை பதிவு செய்து, இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா அடிப்படையிலான மாடல் என்பதால் அல்கஸார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

பிரிமீயம் மாடலாக வரும் அல்கஸார்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட அதிக பிரிமீயம் அம்சங்கள் கூடுதல் இருக்கை வசதியுடன் வருவதால், புதிய அல்கஸார் எஸ்யூவியை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் முன்பணத்துடன் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில், க்ரெட்டா மற்றும் அல்கஸார் இடையில் செய்யப்பட்டுள்ள சில முக்கிய வேறுபாடுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

கூடுதல் நீளம்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 4,300 மிமீ நீளமும், 2,610 மிமீ வீல் பேஸ் நீளமும் கொண்டுள்ள நிலையில், அல்கஸார் எஸ்யூவி 4,330 மிமீ நீளமும், 2,760 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளது. அதாவது, க்ரெட்டாவைவிட 150 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளம் இருப்பதால், மூன்றாவது வரிசையிலும் சிறப்பான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

டிசைன்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பிலிருந்து அல்கஸார் எஸ்யூவியின் க்ரில் அமைப்பு வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, க்ரோம் வில்லைகள் பொருத்தப்பட்ட க்ரில் அமைப்புடன் மிகவும் பிரிமீயமாக தோற்றமளிக்கிறது அல்கஸார். அதேபோன்று, பின்புறத்தில் கூடுதலாக குவார்ட்டர் க்ளாஸ் இடம்பெற்றுள்ளதால், காருக்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

புதிய அலாய் வீல்கள்

ஹூண்டாய் க்ரெட்டாவிலிருந்து வேறுபடுத்தும் மற்றொரு முக்கிய விஷயம், அல்கஸார் எஸ்யூவியின் அலாய் வீல்கள். க்ரெட்டாவில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படும் நிலையில், அல்கஸாரில் 18 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட உள்ளன. இரட்டை வண்ணத்திலான மெஷின் கட் அலாய் வீல்கள் மிகவும் கவரும் வகையில் உள்ளது.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், அண்மையில் வெளியான ஸ்பை படங்களில் கருப்பு மற்றும் பீஜ் வண்ண இன்டீரியர் தீம் இடம்பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த எஸ்யூவியில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகள் கொடுக்கப்படும். 6 சீட்டர் மாடலில் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளும், 7 சீட்டர் மாடலில் பெஞ்ச் வகை இருக்கையும் கொடுக்கப்பட உள்ளன.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

பூட்ரூம் இடவசதி

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 433 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. ஆனால், அல்கஸார் எஸ்யூவியில் மூன்றாவது வரிசை இருக்கை காரணமாக 180 லிட்டர் பூட்ரூம் இடவசதியை அளிக்கும். ஆனால், மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற விகிதத்தில் மடக்க முடியும் என்பதால், பொருட்களை வைப்பதற்காக இடவசதியை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

எஞ்சின்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அல்கஸார் எஸ்யூவியில் அதிக செயல்திறன் வாய்ந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின 157 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேநேரத்தில், டீசல் மாடலில் க்ரெட்டாவில் உள்ள அதே 1.5 லிட்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் வழங்கப்படும்.

 ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் அல்கஸார் எஸ்யூவிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள்!

விலை வித்தியாசம்

ஹூண்டாய் க்ரெட்டா 5 சீட்டர் எஸ்யூவி ரூ.9.99 லட்சம் முதல் ரூ.17.53 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய அல்கஸார் எஸ்யூவி ரூ.11.50 லட்சம் முதல் ரூ.18.50 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிக விரைவில் சந்தைக்கு வரும் அல்கஸார் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Here are given some key differences between Hyundai Alcazar and Hyundai Creta SUV models.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X