அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி... வீடியோ!

புத்தம் புதிய அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சியை செய்து அசத்தி இருக்கிறது. இதற்காக, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 மாடலாக க்ரெட்டா இருந்து வருகிறது. இந்த நிலையில், க்ரெட்டாவின் அடிப்படையில் புதிய 7 சீட்டர் மாடலை ஹூண்டாய் உருவாக்கி இருக்கிறது. அல்கஸார் என்று பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், கொரோனாவால் அறிமுகம் தள்ளிப்போய் வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அல்கஸார் எஸ்யூவிக்கு ஒரு வித்தியாசமான வரவேற்பு வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

ஆம், தனது வெனியூ, க்ரெட்டா, கோனா எலெக்ட்ரிக் மற்றும் டூஸான் எஸ்யூவிகளை பயன்படுத்தி, அல்கஸார் எஸ்யூவியின் பெயரை ரான் ஆஃப் கட்ச் உப்பு பாலைவனப் பகுதியில் வரைந்து அசத்தி இருக்கிறது.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் செய்யப்பட்டாலும், இந்தியாவில் இது புதுமையானதாகவும், வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

ரான் ஆஃப் கட்ச் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கண்ட 4 எஸ்யூவிகளையும் பயன்படுத்தி, தரையில் அல்கஸார் பெயரை ஆங்கிலத்தில் வரைந்துள்ளனர். இதனை ஹெலிகாப்டரில் இருந்து படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

இந்த முயற்சிக்காக கார் ஓட்டுவதில் வல்லவர்களை பயன்படுத்தி இருக்கிறது ஹூண்டாய். அவர்கள் மிகச் சிறப்பாக திட்டமிட்டு, அழகாக அல்கஸார் பெயரை தரையில் 4 எஸ்யூவிகளை வைத்து வரைந்துள்ளனர்.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

இந்த வரவேற்பு நிச்சயம் அல்கஸார் வருகையை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. புதிய அல்கஸார் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

புதிய ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

 அருமை... அல்கஸார் எஸ்யூவியை வரவேற்க ஹூண்டாய் நிறுவனத்தின் வித்தியாசமான முயற்சி!

ரூ.12 லட்சம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரெட்டா எஸ்யூவியைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் புதிய அல்கஸார் எஸ்யூவி வர இருக்கிறது.

Most Read Articles
t

English summary
Hyundai has released a new promo video for the upcoming Alcazar SUV. In the video, all SUVs currently sold by the brand are seen driving at the Great Rann of Kutch salt marsh. This includes the Hyundai Creta, Hyundai Venue, Hyundai Tucson and the Hyundai Kona EV.
Story first published: Monday, May 31, 2021, 17:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X