சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

2021 அவ்ரா (Aura) செடான் காரில் வழங்கி வந்த வசதிகளை எந்தவொரு அறிவிப்புமுமின்றி ஹூண்டாய் (Hyundai) இந்தியா நிறுவனம் அதன் வெப்சைட் பக்கத்தில் திருத்தியமைத்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

ஹூண்டாய் கார்களில் வழங்கப்படுகின்ற அம்சங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில், அவ்ரா செடான் காருக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு வந்த வசதிகள் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் வெப்சைட்டில் சற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

இதன்படி ஹூண்டாய் அவ்ரா மாடலின் எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஒ) மற்றும் எஸ்எக்ஸ்+ வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வந்த பின் இறக்கை ஸ்பாய்லர் (Rear Wing Spoiler) நீக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து இந்த அவ்ரா வேரியண்ட்களில் வழங்கப்படும் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

அவ்ராவின் எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்+ மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) வேரியண்ட்களில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஹூண்டாய் நிறுவனம் பின்பக்க இறக்கை ஸ்பாய்லர் அப்கிரேடை கொண்டுவந்திருந்தது. அது தற்போது நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை இதுவரையில் ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

இதனால் இந்த மாற்றம் எதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. ஒன்று, வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அல்லது, பாக பற்றாக்குறையால் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இவ்வாறான முடிவை எடுத்திருக்கலாம்.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

கார் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விற்பனை செய்யும் கார்களின் அவ்வப்போது அப்டேட்களை கொண்டுவருவது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் அப்டேட் கொண்டுவரப்பட்ட சில மாதங்களுக்கு உள்ளாக அந்த அப்டேட் ரத்து செய்யப்பட்டிருப்பது ஹூண்டாய் அவ்ரா கார் பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

பின்பக்க விங் ஸ்பாய்லர் நீக்கப்பட்டாலும், வயர் இல்லா சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சாவியில்லா நுழைவு மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி உடன் ஓட்டுனர் இருக்கை போன்ற சிறப்பம்சங்கள் ஹூண்டாய் அவ்ராவில் வழங்கப்படுகின்றன.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என மூன்று விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் முறையே 99 பிஎச்பி & 172 என்எம் டார்க் திறன் மற்றும் 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறன் வரையில் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியவைகளாக விளங்குகின்றன. இதில் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு அவ்ராவின் ஒரே ஒரு எஸ்எக்ஸ்+ ட்ரிம் நிலையில் மட்டுமே கிடைக்கிறது.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

இந்த மூன்று என்ஜின் தேர்விலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையானதாக வழங்கப்படுகிறது. அதேநேரம் 1.2 லி பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வுகளுடன் மட்டும் கூடுதல் தேர்வாக ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. மேலும், சிஎன்ஜி வெர்சனிலும் ஹூண்டாய் அவ்ரா விற்பனை செய்யப்படுகிறது.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

ஹூண்டாயின் இந்த செடான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. அதிகப்பட்சமாக ரூ.9.36 லட்சம் வரையில் இதன் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளன. அவ்ராவின் டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.7.91 லட்சத்தில் இருந்து துவங்குவது குறிப்பிடத்தக்கது.

சைலண்ட்டாக, 2021 அவ்ரா செடான் காரை அப்டேட் செய்துள்ள ஹூண்டாய்!! முக்கியமான வசதி நீக்கம்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், இம்பொளிசர், ஹெட்லேம்ப் துணை செயல்பாடு, காரின் வேகத்தை உணர்ந்து லாக் ஆகும் கதவுகள், ISOFIX குழந்தை இருக்கைக்கான கொக்கி உள்ளிட்டவை பெறும் ஹூண்டாய் அவ்ராவிற்கு விற்பனையில் போட்டியாக மாருதி சுஸுகி டிசைர், ஃபோர்டு அஸ்பியர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Hyundai Aura sedan gets feature update, removed rear wing spoiler.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X