என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

விற்பனையில் சக்கைப்போடு போட்டுவரும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் விரைவில் 7-இருக்கை வெர்சனில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது 7-இருக்கை க்ரெட்டா கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

இந்தியாவில் எஸ்யூவி பிரிவில் பிரபலமான காராக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா தற்சமயம் 5 இருக்கை வெர்சனில் மட்டும்தான் கிடைக்கிறது. இது 7 இருக்கைகளுடன் வெளியாகவுள்ள செய்திகள் கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக வெளியாகி வருவதால் க்ரெட்டா 7 இருக்கை தேர்வில் வெளிவரவுள்ளதா என்பது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தாது.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

ஆனால் தற்போது வீ கைடு ஆட்டோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இதன் ஸ்பை படங்கள் உங்களை சற்று ஆச்சிரியப்படுத்தலாம். இந்த படங்களில் கார் முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டிருப்பதாலும், இரவு நேரம் என்பதாலும், காரின் உட்புற கேபினை தான் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

உட்புறத்தில் இந்த 7-இருக்கை ஹூண்டாய் கார், க்ரெட்டாவின் தற்போதைய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை காட்டிலும் பெரிய தொடுத்திரையை கொண்டுள்ளது. இதனுடன் ஆட்டோ-டிம்மிங் பின்பக்கத்தை காட்டும் உட்பக்க கண்ணாடியையும் பார்க்க முடிகிறது.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

ஏற்கனவே கூறியதுபோல் இந்த 7-இருக்கை க்ரெட்டாவின் வெளிப்புறங்களில் ஏதேனும் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பதை இந்த ஸ்பை படங்களின் மூலமாக எந்த விதத்திலும் அறிய முடியவில்லை. ஆனால் இந்த கார் புதிய மெஷ் க்ரில், பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள், அலாய் சக்கரங்கள், ரீடிசைனில் பம்பர்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

ஏனெனில் இவற்றை ஹூண்டாய் நிறுவனம் அதன் க்ரெட்டா எஸ்யூவி காரில் வழக்கமாக வழங்கும் அம்சங்களாகும். அதேநேரம் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசையினால் காரின் நீளம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதை மறந்திட வேண்டாம்.

என்னாது... இவ்வளவு பெரிய தொடுத்திரையா!! 7-இருக்கை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான ஸ்பெஷல் அப்கிரேட்!

மற்றப்படி 5-இருக்கை க்ரெட்டாவின் தற்போதைய 1.4 லிட்டர் ஜிடிஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதேபோல் இந்த என்ஜின்களுடன் வழங்கப்படும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும் மாற்றத்தை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் குறைவே.

Most Read Articles

English summary
Upcoming 7-seater Hyundai Creta test mule spotted in India; reveals new interior details. Read In Tamil.
Story first published: Monday, February 22, 2021, 22:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X