மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை குறைவான டீசல் வேரியண்ட்டின் பெயர் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

2015ல் அறிமுகமானதில் இருந்து ஹூண்டாய் க்ரெட்டா அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி காராகவே இதுவரை இருந்து வருகிறது. விற்பனை சற்று குறைய தொடங்கிய நேரத்தில் சரியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் க்ரெட்டாவின் புதிய தலைமுறையை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டுவந்தது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

இருப்பினும் அதன்பின் கொரோனா வைரஸ் பரவலினால் உலகமே தலைக்கீழாக மாறும் என்பதை ஹூண்டாய் நிறுவனம் அறிந்திருக்கவில்லை. 2020 ஹூண்டாய் க்ரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ்(O) என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

ஆனால் தற்போது இந்த ஐந்தில் விலை குறைவான ஆரம்ப நிலை டீசல் இ வேரியண்ட்டின் பெயர் நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வாங்கப்படும் க்ரெட்டா கார்களில் 60 சதவீதம் டீசல் கார்கள் என்று ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

க்ரெட்டா டீசல் வேரியண்ட்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் இ டீசல் ட்ரிம்மை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு காலம் தற்சமயம் 10 மாதங்களாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

இந்த விலை குறைவான டீசல் வேரியண்ட்டின் பெயர் நீக்கப்பட்டாலும், மற்றொரு விலை குறைவான க்ரெட்டா வேரியண்ட்டான இ பெட்ரோல் ரூ.9.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை உடன் உள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

இந்த டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் அதிகப்பட்சமாக ஒரே மாதிரியாக 115 பிஎச்பி பவரைதான் வெளிப்படுத்துகின்றன. ஆனால் டார்க் திறனில் (144 என்எம் & 250 என்எம்) இரண்டும் வேறுபடுகின்றன. இவை இரு என்ஜின்கள் மட்டுமின்றி 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்விலும் க்ரெட்டா கிடைக்கிறது.

மலிவான டீசல் வேரியண்ட்டை இழக்கிறதா ஹூண்டாய் க்ரெட்டா?! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்...

க்ரெட்டா வேரியண்ட்களை முன்பதிவு செய்வதற்கான முன்பதிவு தொகை ரூ.25,000ஆக ஹூண்டாய் நிர்ணயித்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மட்டுமின்றி சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான மஹிந்திரா தார் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களுக்கும் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hyundai Creta Diesel E Variant Delisted
Story first published: Sunday, February 7, 2021, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X