ஹூண்டாய் கிரெட்டா vs ஸ்கோடா குஷாக் vs கியா செல்டோஸ்... விலை, வசதிகள், இதர முக்கிய அம்சங்கள் ஒப்பீடு

ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷாக் எஸ்யூவிக்கள் இடையேயான ஒப்பீட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய கார்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டியிடும். இந்த 3 எஸ்யூவி கார்களுக்கு இடையேயான ஒப்பீட்டை இந்த செய்தியில் பார்க்கலாம். நீங்கள் இதில் ஒரு காரை வாங்குவதாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவும்.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

வண்ண தேர்வுகள்:

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மொத்தம் 4 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. டொராண்டோ ரெட் மெட்டாலிக், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல் மெட்டாலிக், ஹனி ஆரஞ்ச் மெட்டாலிக் ஆகியவைதான் அந்த 4 வண்ண தேர்வுகள் ஆகும். அதே நேரத்தில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் கேபின், கருப்பு-க்ரே ட்யூயல் டோன் வண்ணத்தில் கிடைக்கிறது.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

மறுபக்கம் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி மொத்தம் 9 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், போலார் ஒயிட், ரெட் மல்பெரி, டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச், டைபூன் சில்வர், பாந்தம் பிளாக் மற்றும் டைட்டன் க்ரே ஆகிய ஏழு ஒற்றை வண்ண தேர்வுகளும், போலார் ஒயிட்/பாந்தம் பிளாக், லாவா ஆரஞ்ச்/பாந்தம் பிளாக் ஆகிய இரண்டு ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளும் அடங்கும்.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

கேபினை பொறுத்தவரையில், கருப்பு மற்றும் ஆரஞ்ச், கருப்பு மற்றும் க்ரேஜ் என இரண்டு வண்ண தேர்வுகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி காரானது மொத்தம் 12 வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. இதில், 5 ட்யூயல் டோன் வண்ண தேர்வுகளாகும். எஞ்சிய ஏழும், சிங்கிள் டோண் வண்ண தேர்வுகள் ஆகும்.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

கியா செல்டோஸ் எஸ்யூவி இன்டென்ஸ் ரெட், கிளாசியர் ஒயிட் பேர்ல், ஸ்டீல் சில்வர், கிராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், இன்டெலிஜென்ஸி ப்ளூ மற்றும் பன்ச்சி ஆரஞ்ச் ஆகிய சிங்கிள் டோன் வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. கருப்புடன் ஒயிட் பேர்ல், வெள்ளையுடன் ஆரஞ்ச், ஆரஞ்ச் உடன் ஒயிட் பேர்ல், கருப்புடன் சிகப்பு, ஆரஞ்ச் உடன் சில்வர் ஆகியவை ட்யூயல் டோன் வண்ண தேர்வுகள் ஆகும். கியா செல்டோஸ் எஸ்யூவியின் கேபின் கருப்பு வண்ணத்தில் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

வேரியண்ட்கள்:

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரானது ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. மறுபக்கம் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி, E, EX, S, SX Executive, SX, SX(O) என 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதே நேரத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி, ஜிடி லைன், டெக் லைன் என இரண்டு பெரிய வேரியண்ட் லைன்களில், HTE முதல் GTX+ வரை 7 சப் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

வசதிகள்:

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், 6 ஸ்பீக்கர்களுடன் ஸ்கோடா ஆடியோ சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பேடில் ஷிஃப்டர்கள், ஆம்பியண்ட் லைட்டிங், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

மறுபக்கம் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், 8 வழிகளில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆம்பியண்ட் லைட்டிங், 6 ஏர்பேக்குகள், ஏர் ப்யூரிஃபையர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

அதே நேரத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஏர் ப்யூரிஃபையர், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. கியா செல்டோஸ் எஸ்யூவி காரிலும் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. வசதிகள் நிரம்பிய எஸ்யூவியாகதான் இதுவும் உள்ளது.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

பரிமாணங்கள்:

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் நீளம் 4,225 மிமீ. அகலம் 1,760 மிமீ. உயரம் 1,612 மிமீ. வீல்பேஸ் நீளம் 2,651 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 188 மிமீ. பூட் ஸ்பேஸ் 385 லிட்டர்கள். ஆனால் பின் வரிசை இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டால், இதனை 1,405 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும். ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவியின் நீளம் 4,300 மிமீ. அகலம் 1,790 மிமீ. உயரம் 1,635 மிமீ. வீல்பேஸ் நீளம் 2,610 மிமீ.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 190 மிமீ. பூட் ஸ்பேஸ் 433 லிட்டர்கள். கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் நீளம் 4,315 மிமீ. அகலம் 1,800 மிமீ. உயரம் 1,620 மிமீ. வீல்பேஸ் நீளம் 2,610 மிமீ. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 190 மிமீ. பூட் ஸ்பேஸ் 433 லிட்டர்கள். பூட் ஸ்பேஸ், க்ரவுண்ட் க்ளியரன்ஸ், வீல்பேஸ் நீளம் உள்ளிட்ட அம்சங்களில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள் ஒன்றுபடுகின்றன.

ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் கிரெட்டா vs கியா செல்டோஸ் ஒப்பீடு!

விலை:

ஸ்கோடா குஷாக் - 10.49 லட்ச ரூபாய் முதல் 17.59 லட்ச ரூபாய் வரை

ஹூண்டாய் கிரெட்டா - 9.99 லட்ச ரூபாய் முதல் 17.70 லட்ச ரூபாய் வரை

கியா செல்டோஸ் - 9.95 லட்ச ரூபாய் முதல் 17.65 லட்ச ரூபாய் வரை

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Hyundai Creta vs Kia Seltos vs Skoda Kushaq: Colour Options, Variants, Features, Dimensions. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X