லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

கண்களை கவரும் மஞ்சள் நிறத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா செடான் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாயின் ப்ரீமியம் செடான் காராக எலண்ட்ரா விளங்குகிறது. இந்த காரின் விற்பனையை நிலையாக வைத்திருக்க ஹூண்டாய் நிறுவனம் அவ்வப்போது இந்த காரில் மாற்றங்களை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

அதேநேரம் மாடிஃபை பணிகளிலும் இந்த செடான் கார் அவ்வப்போது உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்ட எலண்ட்ரா காரை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

விஷால் எக்ஸாண்டர் என்பவரது யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாடிஃபை மாற்றங்கள் அனைத்தும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

இதில் மிக முக்கியமான மாற்றமே பளிச்சிடும் மஞ்சள் நிற பெயிண்ட்தான். இந்த நிறத்தை லம்போட்ர்கினி மஞ்சள் என அழைப்பார்கள். காரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய அனைத்து க்ரோம் பாகங்களும் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக கருப்பு நிற பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

முன்பக்கத்தில் க்ரில் முழுவதுமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதன்படி க்ரில் அமைப்பு இரண்டாக பிளவுப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் லோகோ நீக்கப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை எலண்ட்ரா, ஜேஜிடிசி ஏரோடைனாமிக் ஏபிஎஸ் பாடிகிட்டையும் பெற்றுள்ளது.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

பம்பருக்கு அடிப்பகுதியில் பிரிப்பானையும் பார்க்க முடிகிறது. ஃபாக் விளக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக அந்த இடத்தில் காற்று குழாய் பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட் அமைப்புகூட மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

இது தற்போது எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் அனைத்தையும் ஒன்றாக பெற்றுள்ளது. பக்கவாட்டில் லம்போர்கினி கார்களில் உள்ளதை போன்று காற்று குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

இவை எல்லாத்தையும் விட மிக பெரிய மாடிஃபிகேஷன் மாற்றம் என்று பார்த்தால் 18 இன்ச்சில் இரு-நிற அலாய் சக்கரங்களை சொல்லலாம். உண்மையில் அலாய் சக்கரங்கள்தான் காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை தருகின்றன.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

பக்கவாட்டின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் பேனல்கள் காரை மிகவும் தாழ்வாக காட்டுகின்றன. அப்படியே பின் பகுதிக்கு சென்றால், கருப்பு நிற மேற்கூரை ஸ்பாய்லர் உடன் உள்ளது. ஸ்பாய்லர் பின் கதவிலும் பொருத்தப்பட்டுள்ளது.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

பின்பக்கத்தில் டிஃப்யூஸரும் உள்ளது. எக்ஸாஸ்ட் குழாயும் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அக்ரோபோவிக் எக்ஸாஸ்ட் குழாய் வழக்கமான எக்ஸாஸ்ட் குழாயை காட்டிலும் கர்ஜிக்கிறது. ஸ்டாக் டெயில்லேம்ப்கள் எல்இடி யூனிட்கள் மூலமாக மாற்றப்பட்டுள்ளன. உட்புறமும் முழுவதுமாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்

உட்புற கேபின் முழுவதும் கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம் சில சில இடங்களில் மஞ்சள் நிறத்தையும் பார்க்க முடிகிறது. இந்த மாடிஃபை எலண்ட்ரா இரு நிறத்தில் அல்காண்ட்ரா ஸ்டேரிங் சக்கரம், நட்சத்திர விளக்குகளுடன் கருப்பு நிற ரூஃப்லைனரை பெற்றுள்ளது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் எதாவது கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

Most Read Articles

English summary
Kia Sonet rivaling 2021 Renault Kiger subcompact SUV teased ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X