Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் கார்களுக்கு 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு!! இப்போது வாங்குவதுதான் புத்திசாலிதனம்...
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும் ஹூண்டாய் நிறுவனம் சில கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகளை அதன் குறிப்பிட்ட சில கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிப்ரவரி மாதத்தில் வழங்கவுள்ளது.

இதன்படி ஹூண்டாய் சாண்ட்ரோ காரின் எரா ட்ரிம்-ஐ வாங்குவோர் ரூ.20,000 வரையிலும், மற்ற ட்ரிம்களை வாங்குவோர் ரூ.30,000 வரையிலும் பணம் தள்ளுபடியை பெறலாம். சாண்ட்ரோவின் அனைத்து ட்ரிம்மிற்கும், ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்பிரேட் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ10 நியோஸ் ரூ.45,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியுடன் இந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ரூ.45,000-ஐ இதன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.

ஏனெனில் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.15,000 பணம் தள்ளுபடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்பிரேட் தள்ளுபடி முறையே ரூ.15,000 மற்றும் ரூ.5,000 ஆகும்.

ஹூண்டாயின் சமீபத்திய செடான் கார்களுள் ஒன்றான அவ்ரா ரூ.50,000 பணம் தள்ளுபடியில் கிடைக்கும். இந்த பணம் தள்ளுபடியும் க்ராண்ட் ஐ10 நியோஸை போன்று அவ்ராவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் வேரியண்ட்களை வாங்குவோர் ரூ.20,000 மட்டுமே மிச்சப்படுத்த முடியும். அவ்ராவின் சிஎன்ஜி மாடல்களை வாங்குவோருக்கு அது கூட கிடையாது. ஆனால் அனைத்து வேரியண்ட்களிலும் ரூ.15,000 மதிப்பிலான கார்பிரேட் போனஸ் மற்றும் ரூ.5,000ல் கார்பிரேட் போனஸை பெறலாம்.

ஹூண்டாய் எலண்ட்ராவின் பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு ரூ.30,000 வரையில் பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் பெட்ரோல்-மேனுவல் மாடல்களை வாங்குவோர் ரூ.70,000 தள்ளுபடியை பெறலாம்.
Hyundai | Cash Discount | Exchange Bonus + Corporate discount |
Santro | Up to ₹30,000 | ₹15,000 + ₹5,000 |
Grand i10 NIOS | Up to ₹45,000 | ₹10,000 + ₹5,000 |
Aura | Up to ₹50,000 | ₹15,000 + ₹5,000 |
i20 | - | - |
Venue | - | - |
Verna | - | - |
Elantra | Up to ₹70,000 | ₹30,000 + 0 |
Creta | - | - |
Tucson | - | - |
Kona | Up to ₹1.5 Lakh | - |
Xcent Prime | ₹50,000 | - |

டீசல் வேரியண்ட் எந்தவொரு பணம் தள்ளுபடி சலுகையையும் பெறவில்லை. ரூ.30,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் ஒரே இந்திய எலக்ட்ரிக் மாடலான கோனோ இவி-க்கு ரூ.1.5 லட்சம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கோனாவை வெள்ளை நிறத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 பணம் தள்ளுபடியையே பெற முடியும். இந்த எலக்ட்ரிக் காருக்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்பிரேட் போனஸ் போன்ற எதுவும் வழங்கப்படவில்லை.

கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்யும் எக்ஸ்செண்ட் ப்ரீமியம் காரை இந்த பிப்ரவரி மாதத்தில் வாங்கினால் ரூ.50,000-ஐ சேமிக்கலாம். இவற்றுடன் டாக்டர்கள், பதிவு செய்யப்பட்ட நர்ஸ் மற்றும் மருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.3,000 மதிப்பில் சலுகையையும் மேற்கூறப்பட்ட ஹூண்டாய் கார்களில் பெறலாம்.