ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்தியாவிலேயே முதல்முறையாக காற்று சஸ்பென்ஷன் உடன் ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றிய கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

ஹூண்டாய் ஐ20, ப்ரீமியம் தரத்திலான உட்புறம், சிறப்பான & மென்மையான பயணம், விசாலமான உட்புற கேபின் மற்றும் அதிக எண்ணிக்கையிலான என்ஜின் தேர்வுகளுடன் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற பக்கா ஹேட்ச்பேக் காராகும்.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

ஆனால் மாடிஃபிகேஷன் பணிகளில் உட்படுத்த ஐ20 அவ்வளவு ஏற்ற வாகனம் கிடையாது என்பது பரவலான கருத்து. உண்மையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஐ20 கார்களையும் அவ்வளவாக நாம் பார்த்தது இல்லை.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

ஆனால் கேரளா, கொச்சினை சேர்ந்த சிலர் இரண்டாம் தலைமுறை ஐ20 காரை (தற்சமயம் விற்பனையில் இருப்பது மூன்றாம் தலைமுறை) மாடிஃபை செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ முசாஃபிர் (எ) ஜோஷி என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த மாடிஃபை காரை பார்த்தவுடனே தெரிகிறது, காருக்கு கருப்பு நிறத்தில் கஸ்டம் பெயிண்ட்டை வழங்கியுள்ளனர் என்பது. ஹூண்டாய் லோகோவிற்கும் கருப்பு நிறம் வழங்கியுள்ளதை தவிர்த்து, காரின் முன்பக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

பக்கவாட்டில் கஸ்டம் சக்கர வளைவுகளை இந்த ஹூண்டாய் ஐ20 கார் ஏற்றுள்ளது. காரின் அகலத்தை அதிகப்படுத்தி உள்ள இந்த வளைவுகள் உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது, ஃபைபரால் இல்லை.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இதனுடன் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ள ஓரங்கள் காருக்கு மிகவும் கவர்ச்சிக்கரமான தாழ்வான தோற்றத்தினை வழங்குகின்றன. இதற்கு ஏற்றாற்போல் பின்பக்கத்தில் கிட்டத்தட்ட பின்கதவின் மீது ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இவற்றுடன் கருப்பு நிற ஷேடில் 17 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ள மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் உண்மையில், இவை எல்லாம் இரண்டாம் தர மாடிஃபிகேஷன் பணிகளே.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

ஏனெனில் முக்கியமான மாடிஃபிகேஷன் மாற்றமாக காற்று சஸ்பென்ஷனை இந்த ஐ20 கார் பெற்றுள்ளது. மொத்த காற்று சஸ்பென்ஷன் பாகங்களும் காரின் பின்பக்க பொனெட்டிற்கு அடியில் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்த மாடிஃபிகேஷன் மாற்றத்தினால் இயக்கத்தின்போது ஐ20 காரின் சத்தமே முற்றிலும் வேறுப்பட்டு, சந்தைக்கு பிறகான எக்ஸாஸ்ட் அமைப்பை பெற்ற காரில் இருந்து வெளிவருவதை போன்று உள்ளது. ஆனால் மாடிஃபிகேஷன் செய்தவர்களுக்கும் உரிமையாளருக்கும் மட்டுமே தெரியும், இந்த காரில் காற்று சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது என்று.

ஹூண்டாய் ஐ20 காரில் ஏர் சஸ்பென்ஷனா? அசத்தி காட்டிய கேரள இளைஞர்கள்... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை

இந்த சிஸ்டம் காரின் தரைத்தளத்தின் உயரத்தை அதிகரிக்கவும், வளைவுகளின் போது குறைக்கவும் செய்யவும். காற்று சஸ்பென்ஷனுக்கான கண்ட்ரோல்கள் இந்த ஐ20 காரில் உட்புற மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தரையில் இருந்து காரின் தரைத்தளத்தின் உயரத்தை பயணிகளே நிர்ணயித்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
This Modified Hyundai i20 Features Air Suspension, Only One in India. Read In Tamil.
Story first published: Saturday, March 20, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X