கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

கொரோனாவினால் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய ஆட்டோமொபைல் துறை இப்போதுதான் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் கார்கள் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் முதலிடத்தை வகிப்பது மட்டுமில்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையிலும் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி நிறுவனமே முதலிடத்தை பிடித்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதத்தில் 11,364 கார்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. 2020 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் இதன் ஏற்றுமதி 11.58 சதவீதம் கடந்த மாதத்தில் உயர்ந்துள்ளது. அதுவே, ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 10,200 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

இது 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 14.61 சதவீதம் அதிகமாகும். இவற்றிற்கு அடுத்து நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் 5,182 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நுழைந்த நிறுவனங்களுள் ஒன்றான கியா மோட்டார்ஸ் இந்தியா 3,665 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?
Brand February April-February
2021 % Change 2020-2021 % Change
Hyundai 10,200 14.61 92,321 -43.67
Maruti 11,364 11.58 83,530 -12.66
Ford 664 -93.30 43,422 -64.14
Kia 3,665 2.69 35,803 89.67
Volkswagen 1,152 -83.41 29,520 -46.92
GM NA - 28,619 -47.84
Nissan 5,182 -24.16 27,165 -62.39
Renault 1,308 -6.84 8,260 -42.22
Mahindra 814 24.66 6,339 -43.05
Honda 987 1545.00 4,082 15.67
FCA 6 -99.20 4,081 22.22
Tata NA - 263 -85.35
Isuzu 0 - 229 133.67
Toyota 3 -99.70 43 -99.60
Mahindra Electric Mobility 0 - 16 -81.40
Skoda 0 - 12 200.00

கடந்த மாத ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரையிலான மொத்த லிஸ்ட்டில் மாருதி நிறுவனத்தை முந்தி கொண்டு முதலிடத்தில் உள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

இந்த தென் கொரிய நிறுவனம் மொத்தமாக 2020 ஏப்ரல்- 2021 பிப்ரவரி காலத்தில் 92,321 கார்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை 2019 ஏப்ரல்- 2020 பிப்ரவரி மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடும்போது 43.67 சதவீதம் குறைவாகும்.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

இந்திய ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி 83,530 கார்களை 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதன் ஏற்றுமதியும் 12.66 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 5,182 கார்களை ஏற்றுமதி செய்திருந்தாலும், மொத்தமாக 27,165 கார்களையே நிஸான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் போட்டி போடும் ஹூண்டாய், மாருதி சுஸுகி!! முதலிடம் யாருக்கு தெரியுமா?

இதில் இருந்து மேக்னைட்டின் அறிமுகத்திற்கு பிறகே ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை 43,422 கார்கள் ஏற்றுமதியுடன் ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.

Most Read Articles

English summary
Hyundai and Maruti battle to be India's No. 1 car exporter in FY2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X