க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளால் கார் விற்பனை இந்தியாவில் கடந்த மே மாதத்தில் சற்று பாதித்துள்ளது. இருப்பினும் க்ரெட்டா இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறது.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

கடந்த மாதத்தில் மட்டும் 7,527 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. க்ரெட்டா கார்களை தயாரிப்பதை ஹூண்டாய் நிறுவனம் வேகமாக அதிகரித்து வருவதால், இந்த எஸ்யூவி காரை முன்பதிவு செய்து நீண்ட நாட்களுக்கு டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆரம்ப நிலை இ ட்ரிம்-ஐ தவிர்த்து இ.எக்ஸ், எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ்(ஒ) ட்ரிம்களில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக இந்த ட்ரிம்களின் விலைகள் ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டன.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

அதேநேரம் இ ட்ரிம்மில் சில வசதிகள் நீக்கப்பட்டன. இதனால் இதன் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் க்ரெட்டாவின் பலத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் என்கிற புதிய வேரியண்ட்டை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இந்த புதிய வேரியண்ட் தற்போதைய எஸ்.எக்ஸ் வேரியண்ட்டை தான் அடிப்படையாக கொண்டிருக்கும் என்று. ஆனால் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டிற்கு முன்னதாகவே புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட உள்ளது.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

ஏனெனில் எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டின் விலை எஸ்.எக்ஸ்-ஐ காட்டிலும் சுமார் ரூ.79 ஆயிரம் அளவில் குறைவாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மேனுவல் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

விலை குறைவினால் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ப்ளூலிங்க் இணைய வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு, பர்க்லர் அலார்ம், அர்கமைஸ் சவுண்ட் மோட், காரின் பின்பக்கத்தை கண்காணிக்கும் மானிட்டர், குரலை அடையாளம் காணும் பொத்தான் உள்ளிட்டவை இந்த புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட போவதில்லை.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

பகல்/இரவு கண்ணாடி மற்றும் காரின் உடல் நிறத்தில் வெளிப்புற கதவு கைப்பிடிகளை பெறவுள்ள எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு மாற்றாக அந்த பகுதியில் கவர் வழங்கப்படவுள்ளதாக ரஷ்லேன் செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

இதுமட்டுமின்றி ப்ளூடூத் மைக், ஸ்டேரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, பின்பக்கத்தை காட்டும் கேமிரா, யுஎஸ்பி துளை உள்ளிட்ட அம்சங்களையும் இந்த வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் ஆடியோ ஆக்ஸஸரீகளையும் வாடிக்கையாளர்கள் டீலர்களின் உதவியுடன் பொருத்தி கொள்ள முடியும்.

க்ரெட்டாவில் புதிய எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட்!! விற்பனையை அதிகரிக்க ஹூண்டாயின் தந்திரம்!

இது வாகனத்தின் உத்தரவாத காலத்தை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எஸ்.எக்ஸ் மேனுவல் வேரியண்ட் இனி குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாகவும், எஸ்.எக்ஸ் எக்ஸிக்யூட்டிவ் வேரியண்ட் க்ரெட்டாவின் பிரதான வேரியண்ட்டாக கொண்டுவரப்பட உள்ளதாக ஹூண்டாய் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles

English summary
Hyundai Creta SX Executive MT Launch Price Cheaper Than SX MT By Rs 79k.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X