முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

ஹூண்டாயின் புதிய ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் கேபினின் தோற்றம் காரின் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

ஐயோனிக் 5 காரை உலகளவில் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. ஹூண்டாயின் முதல் பேட்டரி காரான இது எலக்ட்ரிக்-க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபாரத்தை உபயோகப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

முழுக்க முழுக்க பேட்டரி காருக்கான இந்த ப்ளாட்ஃபாரத்தினால் ஐயோனிக் 5 காரின் உட்புற கேபினை மிகவும் விசாலமாக, கஸ்டமைஸ்ட் செய்வதற்கு ஏதுவானதாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள படங்களில் இந்த காரின் கேபின் பெரும்பான்மையாக துணியால் மூடப்பட்டுள்ளது.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

மற்ற நடுத்தர அளவு க்ராஸ்ஒவர்களை போல் இல்லாமல் புதிய ஐயோனிக் 5 கார் இ-ஜிஎம் ப்ளாட்ஃபாரத்தால் நீளமான வீல்பேஸ் மற்றும் தட்டையான தரையினை பெற்றிருக்கும். இதனை ஹூண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு மையத்தின் முதன்மை அதிகாரியும் மூத்த துணை தலைவருமான சாங்யூப் லீ உறுதிப்படுத்தி உள்ளார்.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

மேலும் இந்த ப்ளாட்ஃபாரம் மைய கன்சோலை முன்னும் பின்னும் தள்ள அனுமதிக்கும் என்பதால் இந்த எலக்ட்ரிக் காரில் இருந்து வெளியேறுவதும் நுழைவதும் எளிதானதாக இருக்கும். இத்தகைய மைய கன்சோலிற்கு யுனிவர்செல் ஐலேண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

ஓட்டுனர் மட்டுமின்றி அனைத்து பயணிகளுக்கும் கால்களுக்கான தலையணை உடன் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கார் ரீசார்ஜ் ஆகும்போது பயணிகளும் பயணத்திற்கு இடையே சற்று ஓய்வு எடுத்து கொள்ளலாம். அதேபோல் அனைத்து இருக்கைகளையும் முன்னும் பின்னும் தள்ளும் வகையிலேயே ஹூண்டாய் நிறுவனம் வழங்கும்.

முதல் பேட்டரி காரின் கேபினை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் ஹூண்டாய்!! உலகளவில் விரைவில் அறிமுகமாகிறது!

ஏற்கனவே கூறப்பட்டதுபோல் கேபினில் இருக்கைகள் அனைத்தும் துணியால் மூடப்பட்டுள்ளன. இதனால் பயன்படுத்த, பயன்படுத்த இருக்கைகளின் நிறம் மாற வாய்ப்புண்டு. அதேநேரம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களின் மூலம் பெறப்பட்ட மெட்டிரீயல்களினாலும் ஐயோனிக் 5 காரின் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai IONIQ 5 Cabin Teased Ahead Of Global Reveal
Story first published: Thursday, February 18, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X