ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

முன்னதாக இந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஐ20 என் லைன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வழக்கமான ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஸ்போர்டியர் வெர்சனாக கொண்டுவரப்பட்ட இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

இந்த செயல்திறன்மிக்க ஹூண்டாய் காரினை டெஸ்ட் ட்ரைவ் செய்து, அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த கருத்துகளை விமர்சனங்களாக பதிவிட்டுள்ளோம். அவற்றை காண இங்கே க்ளிக் செய்யவும். இந்த நிலையில் தற்போது ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

தடகள தொகுப்பு (Athletic Package) மற்றும் ஆடம்பரமான தொகுப்பு (Flamboyant Package) என்ற இரு விதமான தொகுப்புகளாக இந்த செயல்திறன்மிக்க ஹூண்டாய் பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான விலைகளாக முறையே ரூ.24,523 மற்றும் ரூ.13,923 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

அதாவது காரின் விலையினை செலுத்துவது மட்டுமின்றி இவற்றிற்கான தொகையினையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளின் மூலம் காரின் வெளிப்புறத்தில் ஹெட்லேம்ப்கள், டெயில்லைட்கள் மற்றும் சைடு மோல்டிங் பகுதிகளில் க்ரோம்/ கார்பன் கார்னிஷை பெறலாம்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

இவை தவிர்த்து பம்பர் வளைவு பாதுகாப்பான், மட் கார்ட், கதவு விஸர்கள் மற்றும் டயர் வால்வு மூடி உள்ளிட்டவையும் இந்த ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் உள்ளன. உட்புற கேபினிற்கு சீட் பெல்ட் கவர், தரைப்பாய்கள், ஜன்னல் கண்ணாடிகளுக்கு சன்ஷேட்கள், கப் ஹோல்டர்களுக்கான அடித்தட்டு, கதவு ஸ்கஃப் தட்டு மற்றும் கதவு ஸ்ட்ரைகர் கவர் உள்ளிட்டவை ஆக்ஸஸரீகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

ஐ20 என் லைன் காருக்கான இந்த அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகளை அனைத்து ஹூண்டாய் சிக்னெச்சர் அவுட்லெட்களிலும் வாங்கலாம். ஐ20 என் லைன் ஆக்ஸஸரீகளை அறிமுகம் செய்து பேசிய மொபிஸ் இந்தியா- AS பாகங்கள் பிரிவு நிர்வாக இயக்குனர் யோங் கூன் பார்க் பேசுகையில், புதிய ஐ20 என் லைனின் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸஸரீகள் இந்திய சந்தையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

தற்போதைய தலைமுறை கார் ஆர்வலர்களின் விருப்பங்களை ஏற்று கொள்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றோம். அவர்களது இரசனையுடன் எங்கள் இரசனை பொருந்துகிறது. இந்த ஆக்ஸஸரீகள் உங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் சிக்னெச்சர் டீலர்களிடம் கிடைக்கும். மேலும் ஹூண்டாய் கார் உரிமையாளர்களுக்கான சலுகைகளில் அதிக முன்னேற்றங்களை கொண்டுவர எங்கள் நிபுணர் குழு கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

ஆக்ஸஸரீகளை போலவே என்6 & என்8 என்ற இரு விதமான வேரியண்ட்களில் ஐ20 என் லைன் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் என்ஜின் உடன் கிடைக்கும். டைரக்ட் இன்ஜெக்ஷன் வசதி கொண்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு டாப் என்8 வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ஆரம்ப விலை ரூ.9.84 லட்சமாக (என்6) இருக்க, ஐ20 என் லைன் காரின் அதிகப்பட்ச விலை ரூ.11.75 லட்சமாகும் (எக்ஸ்-ஷோரூம்).

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

இதில் ஆட்டோமேட்டிக் தேர்வில் பேடில் ஷிஃப்டர்கள் ஸ்டேரிங் சக்கரத்தில் பொருத்தப்படுகின்றன. தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான ஐ20 மாடலில் இருந்து வேறுப்படுவதற்காக சில கூடுதல் அலங்கரிப்பு வேலைப்பாடுகளை பெற்றுள்ளது. அதேநேரம் இந்த செயல்திறன்மிக்க வெர்சனை சுற்றிலும் 'N Line' லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

இவற்றுடன் சிறப்பம்சமாக பின்பக்கத்தில் இரட்டை-குழாய் எக்ஸாஸ்ட் அமைப்பு, 16-இன்ச் சக்கரங்களில் சிவப்பு நிறத்தில் ப்ரேக் காலிபர்கள், ரியர் ஸ்பாய்லர், ஸ்போர்டியரான முன்பக்க பம்பர் உள்ளிட்டவற்றையும் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து தனித்து தெரியும் வகையில் ஐ20 என் லைனில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! ரூ.14 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்!

காரின் வெளிப்பக்கத்தை போல் உட்புற கேபினிலும் சில வசதிகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ‘N Line' ஸ்டிக்கர் ஸ்டேரிங் சக்கரத்திலும், கேபினை சுற்றிலும் புதிய விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட முதல் ஹூண்டாய் என்-லைன் காராக விளங்கும் இதன் தோற்றத்தை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகள் மேலும் அழகாக்கும்.

Most Read Articles

English summary
Hyundai i20 N Line accessories revealed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X