நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உள்ள க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்களையும், விபரங்களையும் இன்னும் சில மாதங்களில் வெளியிடவுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி மாடல் முதலாவதாக இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கூறுகின்றன.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

மேலும் புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்துதான் இந்தோனிஷியாவில் எஸ்யூவி கார்களை தயாரிக்க ஹூண்டாய் துவங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படங்கள் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கொண்டுவரப்படும் க்ரெட்டா காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை ஓரளவிற்கு வெளிக்காட்டக்கூடியவைகளாக உள்ளன.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

புதிய க்ரெட்டா பல முறை இந்தோனிஷியாவிலும், தென்கொரியாவிலும் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்ஸன் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாண்டா க்ரூஸ் பிக்அப் ட்ரக்கில் வழங்கப்பட்டிருப்பது போன்றதான முற்றிலும் புதிய முன்பக்கத்துடன் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுவரப்பட உள்ளதை புதிய டீசர் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன. க்ரெட்டாவின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்த அப்டேட்டின்படி கூடுதல் செவ்வகமான ஹெட்லேம்ப்கள் முந்தைய தலைமுறையை காட்டிலும் சற்று கீழிறக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

'பாராமேட்ரிக் க்ரில்' என்ற புதிய டிசைனிலான க்ரில் அமைப்பு காரின் முன்பக்கத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி டக்ஸனில் வழங்கப்பட்டிருக்கும் பாதி-கண்ணாடி வகையிலான எல்இடி டிஆர்எல்கள் புதிய க்ரெட்டாவில் வழங்கப்படுமா என்பதை இந்த டீசர் படங்களின் மூலம் அறிய முடியவில்லை.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

ஏனெனில் புதிய ஸ்கெட்ச் டீசர் படங்களில் காரின் ஹெட்லைட்கள் ஒளிரவில்லை. இத்தகைய எல்இடி டிஆர்எல்-களை ஒளிரும்போதுதான் அடையாளம் காண முடியும். இந்த ஹெட்லேம்ப் அமைப்பில் க்ரில்லும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. அதாவது க்ரில் பகுதியிலும் விளக்குகள் எரியும். பின்பக்கம் கிட்டத்தட்ட ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டாவின் அப்டேட் வெர்சனுக்கு இணையாக இருக்கும்.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்திலும் அப்கிரேட்களை எதிர்பார்கிறோம். இந்த வகையில் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பை க்ரெட்டாவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் குறைந்தது டாப் வேரியண்ட்களிலாவது பெற்றுவரலாம் என தகவல்கள் கூறுகின்றன.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

அதேநேரம் இந்தோனிஷிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் புதியதாக அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவில் டீசல் என்ஜின் தேர்வு நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரே ஒரு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே புதிய க்ரெட்டா விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

மேலும், 5-இருக்கை மற்றும் 7-இருக்கை தேர்வுகளிலும் க்ரெட்டா இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை தற்போதுவரையில் ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. 5 இருக்கைகளுடன் தான் க்ரெட்டா உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இது நமக்கு பழக்கப்பட்டது தான்.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

7-இருக்கை க்ரெட்டாவே இந்தோனிஷிய வாடிக்கையாளர்கள் பலரை கவரும் என கூறப்படுகிறது. ஏனெனில் 7-இருக்கை கியா சொனெட்டை போன்று 7-இருக்கை க்ரெட்டாவின் பரிமாண அளவுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் உட்புறத்தில் 7 இருக்கை வசதியினை ஹூண்டாய் நிறுவனம் கொடுக்கவுள்ளதாம்.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

எவ்வாறு என்றால், மூன்றாவது இருக்கை வரிசையில் சிறிய பெஞ்ச் இருக்கைகளை வழங்கவுள்ளதாம். இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் க்ரெட்டா மாடல் கடந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமாகி 1.5 வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போதும் அதிகளவில் விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

இதனால் அடுத்த 2022ஆம் ஆண்டு பாதி முடியும் வரையில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை இந்திய சந்தையில் எதிர்பார்க்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகே இந்திய சந்தைக்கு அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவை கொண்டுவர ஹூண்டாய் யோசிக்கும். இதற்குள் 2022ஆம் ஆண்டு முடியும் தருவாயில் வந்துவிடும்.

நேர்த்தியான முன்பக்கத்துடன் 2022 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்!! அறிமுகம் விரைவில்!

எப்போது அறிமுகமானாலும், இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்படும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டிற்கு இணையான தோற்றத்தில் தான் புதிய க்ரெட்டா மாடல் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பு (ADAS) போன்ற வசதிகளை க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய வெர்சனிலும் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
2022 Hyundai Creta facelift teased; expected to be unveiled soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X