360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

ஹூண்டாய் வென்யூ கார் ஒன்று 360 கோண கேமிரா உள்பட பல்வேறான ஆக்ஸஸரீகளுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

இந்தியாவில் தற்சமயம் மிக பிரபலமாக இருக்கும் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் வென்யூவும் ஒன்று. ஹூண்டாய் நிறுவனத்தால் கடந்த சில வருடங்களாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் வென்யூவிற்கு அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் வசதிகளினால் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

இதன் அறிமுகத்தில் இருந்து பல்வேறு மாடிஃபை செய்யப்பட்ட வென்யூ கார்களை இதுவரையில் பார்த்துள்ளோம். இந்த வகையில் சில புதிய ஆக்ஸஸரீகளுடன் மாடிஃபை செய்யப்பட்ட வென்யூ கார் ஒன்றை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இது தொடர்பான வீடியோ சிரக் ஷா என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரில் மிக முக்கிய அம்சமாக காரை சுற்றிலும் 360-கோணத்திற்கு பார்க்க உதவும் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் உடன் பல ஆக்ஸஸரீ பாகங்களும் இந்த வென்யூ காரை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளன.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

இதன்படி காரின் முன்பக்கத்தில் பம்பர் பாதுகாப்பான் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதே பகுதியில் ஃபாக் விளக்குகளுக்கு மேலே எல்இடி யூனிட்டையும் பார்க்க முடிகிறது. கூடுதல் வெளிச்சத்திற்கு 60 வாட் எல்இடி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

ஹெட்லைட்டிற்கு அருகில் வழங்கப்பட்டுள்ள இந்த எல்இடி டிஆர்எல் விளக்கு டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படக்கூடியவை என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் தன்னிச்சையாக திரும்பக்கூடிய பக்கவாட்டு கண்ணாடிகளையும் இந்த கார் கொண்டுள்ளது.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

முன்பக்க & பின்பக்க ஹெட்லைட்களை சுற்றிலும், பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளின் பின்பகுதி மற்றும் கதவு கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்னிஷ் க்ரோம் காட்சி தருகின்றன. இந்த க்ரோம் கார்னிஷை தவிர்த்து காரின் பக்கவாட்டில் பெரியதாக வேறெந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், முன்பக்கத்தை போல் பின்பக்க பம்பருக்கும் பாதுகாப்பான் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய பம்பர்களினால் இந்த வென்யூ கார் சற்று பருத்த தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

உட்புறத்தில் ஒளிரக்கூடிய ஸ்கஃப் தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. கேபின் முற்றிலுமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மர பலகைகள் காரின் டேஸ்போர்டு, ஏசி துளைகள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் உள்பட பல்வேறான பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

இவற்றுடன் இந்த மாடிஃபை வென்யூ காரின் கேபின் முழுக்க முழுக்க க்ரே நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருக்கை கவர்கள் இரட்டை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் பொருத்திய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இல்லை, புதியதாக ஒன்று உள்ளது.

360-டிகிரி கேமிரா உடன் ஹூண்டாய் வென்யூ கார்!! உரிமையாளரின் மாடிஃபிகேஷன்...

புதிய 360-கோண கேமிராகளினால் இத்தகைய தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமிரா பக்கவாட்டு கண்ணாடிகளிலும், காரின் முன் மற்றும் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரையில் நாம் பார்த்த அழகான மாடிஃபை ஹூண்டாய் வென்யூ கார்களுள் இதுவும் ஒன்றாகும்.

Most Read Articles

English summary
Hyundai Venue modified with 360 degree camera & other accessories looks good.
Story first published: Tuesday, May 4, 2021, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X