லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

லத்தீன் என்சிஏபி மோதல் சோதனைகளின் முடிவில் ஐந்திற்கு வெறும் பூஜ்ஜிய நட்சத்திரத்தை பெற்று, பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் ஹூண்டாய் வெர்னா செடான் கார் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில், உலகளவில் பலரால் வாங்கப்படும் காராக விளங்கும் கிராண்ட் ஐ10 நியோஸ் 3-நட்சத்திரங்களை பெற்றதில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் அதன் கார்களின் பாதுகாப்பு அம்சங்களை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தது.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இருப்பினும் தற்போது இந்த தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனத்தை கவலையுற செய்யும் விதமாக, வெர்னா செடான் மாடல் லத்தீன் என்சிஏபி மோதல் சோதனைகளில் பூஜ்ஜிய நட்சத்திரை பெற்றுள்ளது. லத்தீன் அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பை கண்டறியும் முயற்சியாக லத்தீன் என்சிஏபி சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதில் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது அக்ஸெண்ட் செடான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை உட்படுத்தி இருந்தது. இதுதான் இந்தியாவில் வெர்னா என்கிற பெயரில் பிரீமியம் தரத்திலான ஹூண்டாய் செடான் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் உட்படுத்த ஹூண்டாய் அக்ஸெண்ட் காரில் ஒற்றை ஓட்டுனர்-பக்க காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை நிலையான தேர்வாக வழங்கப்பட்டிருந்தன.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

ஆனால் இந்திய வெர்னா இரட்டை காற்றுப்பைகளை நிலையான தேர்வாக பெறுகிறது. ஆதலால் இந்த சோதனை முடிவுகள் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெர்னாவிற்கு பொருந்தாது என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம். லத்தீன் என்சிஏபி சோதனையில், முன்பக்க மோதல், பக்கவாட்டு மோதல், பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை ஆராயப்பட்டன.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இதில், 18 வயது மேற்பட்டோர்க்கான பாதுகாப்பில் 9.23 சதவீதத்தையும், பாதசாரிகள் பாதுகாப்பில் 53.11 சதவீதத்தையும், குழந்தைகள் பாதுகாப்பில் 12.68 சதவீதத்தையும் மற்றும் பாதுகாப்பு உதவி அம்சங்களில் 6.98 சதவீதத்தையும் ஹூண்டாய் அக்ஸெண்ட் பெற்றுள்ளது. இத்தகைய பிரீமியம் தர செடான் காரின் தரத்திற்கு இந்த மதிப்பெண்கள் மிகவும் குறைவாகும்.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இருப்பினும், பூஜ்ஜிய நட்சத்திரத்தை பெற்ற போதிலும், இந்த ஹூண்டாய் காரின் உடற்கூடு மற்றும் பயணிகள் கால் வைக்கும் காரின் அடிப்பகுதி உள்ளிட்டவை மோதல்களுக்கு பின்பும் நிலையானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அக்ஸெண்ட்டின் இந்த ஆரம்ப நிலை வேரியண்ட்டில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அமைப்புகள் மிகவும் குறைவு.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இதனாலேயே குறிப்பாக சிறுவர்களுக்கான பாதுகாப்பில் மிகவும் குறைவான மதிப்பெண்களை இந்த கார் பெற்றுள்ளது. அதேபோல், தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த வேரியண்ட்டில் இல்லை என்பதால், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு மதிப்பெண்களும் குறைந்துள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால், பயணிகளுக்கான பக்கவாட்டு காற்றுப்பை எதுவும் இந்த அக்ஸெண்ட் காரில் இல்லை.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இதுவும் 18 வயது மேற்ப்பட்டோர்கான இந்த காரின் பாதுகாப்பு மதிப்பெண்களை வெகுவாக குறைத்துள்ளது. இதில் இருந்து, காரின் கட்டமைப்பு மற்றும் வெளிப்புற பேனல்களின் தரத்தை காட்டிலும், பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் அதிகளவில் இந்த ஆரம்ப நிலை அக்ஸெண்ட் காரில் இல்லாததே இத்தகைய பூஜ்ஜிய நட்சத்திரம் பாதுகாப்பு விஷயத்தில் கிடைத்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

உண்மையில், லத்தீன் என்சிஏபி மோதல் சோதனை குழு, சோதனைக்காக அக்ஸெண்டின் டாப் வேரியண்ட்டை தான் கேட்டதாகவும், ஆனால் ஹூண்டாய் தானாக முன்வந்து இந்த செடான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை அனுப்பி வைத்ததாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகளில் உட்படுத்தப்பட்ட அக்ஸெண்ட் செடான் கார்கள் மெக்ஸிகோவில் உள்ள ஹூண்டாயின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இந்த மெக்ஸிகோ தொழிற்சாலை மட்டுமின்றி, நமது சென்னையில் உள்ள தொழிற்சாலையையும் வெர்னா செடான் கார்களை தயாரிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் பிரதானமாக பயன்படுத்துகிறது. இந்த வகையில் சென்னையில் உருவாக்கப்படும் ஹூண்டாய் வெர்னா கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

லத்தீன்-என்சிஏபி மோதல் சோதனையில் 0 ஸ்டார் உடன் ஹூண்டாய் வெர்னா!! அமெரிக்காவிலேயே இந்த நிலைமையா?

இந்திய வெர்னா தற்போதுவரையில் எந்தவொரு என்சிஏபி சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டு சந்தையில் ஹூண்டாய் வெர்னா மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Verna Completely Flunks The Latin NCAP Crash Test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X