சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் வரலாறு குறித்தும், அதன் தனித்துவமான கார்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திருப்பதுதான், ஆட்டோமொபைல் துறையின் இன்றைய ஹாட் டாபிக். மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இந்த பிரச்னையை சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என வாடிக்கையாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. சென்னைக்கு அருகே உள்ள மறைமலை நகரில் ஒரு தொழிற்சாலையும், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் ஒரு தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்தப்போவதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதவிர மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வருபவர்களும் கவலையடைந்துள்ளனர். ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைப்பதற்கு ஆரம்பத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

ஆனால் தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சிகள் காரணமாக ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை அமைத்தது. மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கொண்டு, கடந்த 1995ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. எனினும் அடுத்த சில ஆண்டுகளில் இந்த கூட்டணி பிரிந்து, ஃபோர்டு நிறுவனம் தனித்து செயல்பட ஆரம்பித்தது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

அதன்பின்னர்தான் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் கூடுதலாக ஒரு தொழிற்சாலையை ஃபோர்டு நிறுவனம் திறந்தது. ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல நல்ல கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அதிக விலை உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் இந்திய வாடிக்கையாளர்களை அவை ஈர்க்க தவறி விட்டன.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை ஃபோர்டு நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவை ஃபோர்டு நிறுவனம் எடுத்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து செயல்படுவதற்கான பல்வேறு முயற்சிகளை ஃபோர்டு நிறுவனம் எடுத்தது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இதன் ஒரு பகுதியாக மஹிந்திரா நிறுவனத்துடன் மீண்டும் ஒரு முறை ஃபோர்டு கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் அதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் தனது முதல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததில் இருந்தே ஃபோர்டு நிறுவனத்தின் பயணம் அவ்வளவு சுமூகமாக இல்லை. இறுதியில் கடினமான ஒரு முடிவை ஃபோர்டு எடுத்துள்ளது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

கனத்த இதயத்துடன் இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவை எடுத்துள்ள ஃபோர்டு நிறுவனத்திற்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில், அந்த நிறுவனத்தின் சில தனித்துவமாக கார்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். இந்த கார்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

ஐகான்

இது செடான் ரக கார் ஆகும். தனது காலத்தில் ஃபோர்டு ஐகான் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. மொத்தம் 3 வேரியண்ட்களில் ஐகான் கிடைத்து வந்தது. அவை அனைத்துமே மேனுவல் வேரியண்ட்கள்தான். 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகளை ஃபோர்டு ஐகான் பெற்றிருந்தது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

எண்டேவர்

இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். டொயோட்டா பார்ச்சூனர் போன்ற கார்களுக்கு ஃபோர்டு எண்டேவர் போட்டியாக உள்ளது. ஃபோர்டு எண்டேவர் காரில் மொத்தம் 2 டீசல் இன்ஜின் தேர்வுகள் உள்ளன. இதில், 2.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இதுதவிர 3.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் தேர்வும் ஃபோர்டு எண்டேவர் காரில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 2.2 லிட்டர் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 3.2 லிட்டர் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஃபோர்டு கார்களில் ஈக்கோஸ்போர்ட் மிகவும் முக்கியமானது. இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கார் இது. ஆம்பியண்ட், ட்ரெண்ட், டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ், ஈக்கோஸ்போர்ட் எஸ் மற்றும் தண்டர் எடிசன் என மொத்தம் 6 ட்ரிம்களில் இது வருகிறது.

சென்னையில் ஃபோர்டு ஆலை வருவதற்காக மஹாராஷ்டிரா உடன் மல்லுக்கட்டிய தமிழ்நாடு... சுவாரஸ்ய வரலாறு!

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போட்டியிட்டு வருகிறது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய ஃபோர்டு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Iconic ford cars
Story first published: Saturday, September 11, 2021, 17:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X