இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்திற்கு இந்திய அரசு டிமாண்ட் ஒன்றை வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் கார்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என இந்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கு இந்திய அரசு தரப்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி வரியை குறைப்பது குறித்து பரிசீலனை செய்வதுடன், எதிர்காலத்தில் டெஸ்லா நிறுவனத்திற்கு சலுகைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் எனவும் இந்திய அரசு விரும்புகிறது. இதனை டெஸ்லா ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்கும்.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

முன்னதாக இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என இந்திய அரசை டெஸ்லா நாடியிருந்தது. இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களை வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டிருப்பதே இதற்கு காரணம். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வைப்பது தொடர்ந்து தாமதமாகி கொண்டே வருகிறது.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

இந்தியாவில் இறக்குமதி வரி மிகவும் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம் என எலான் மஸ்க் சமூக வலை தளங்களில் தெரிவித்திருந்தார். டெஸ்லா நிறுவனம் ஆரம்பத்தில், தனது எலெக்ட்ரிக் கார்களை சிபியூ வழியில் இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கார்கள் விற்பனை செய்யப்படும்.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

அதற்கு பிறகு இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலையை அமைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன்னதாக, இங்கு தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள டெஸ்லா ஆர்வமாக உள்ளது.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

ஆனால் டெஸ்லா நிறுவனம் முதலில் இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை அமைக்க வேண்டும் எனவும், அதற்கு பிறகுதான் அந்த நிறுவனத்தின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய முடியும் எனவும் இந்திய அரசு விரும்புகிறது. ஆனால் இந்திய அரசின் சிறப்பு சலுகைகள் டெஸ்லா நிறுவனத்திற்கு மட்டுமானது கிடையாது.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

மாறாக ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன துறைக்கும் பொருந்தும். இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது. டெஸ்லா விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் முதலில் மாடல் 3 எலெக்ட்ரிக் காரைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை செய்தால் இறக்குமதி வரியை குறைக்கிறோம்... டெஸ்லாவிற்கு டிமாண்ட் வைத்த இந்திய அரசு... என்னனு தெரியுமா?

முதல் வாகனத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தனது மற்ற எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக டெஸ்லா நிறுவனம் பரிசீலனை செய்யும். டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை இங்குள்ள வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
If Tesla Joins 'Make In India', Government Will Lower Import Duty: Here Are All The Details. Read in Tamil
Story first published: Thursday, July 29, 2021, 14:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X