Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்த வரும் புதிய எம்ஜி அஸ்டர் பெட்ரோல் எஸ்யூவி... அறிமுகம் எப்போது?
எம்ஜி அஸ்டர் பெட்ரோல் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் தொடர்ந்து எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டி வருகிறது. அனைத்து மாடல்களுக்குமே குறிப்பிட்ட அளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை எம்ஜி மோட்டார் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பெட்ரோல் வெர்ஷனாக இந்த புதிய மாடல் வர இருக்கிறது. மேலும், இந்த எஸ்யூவி அஸ்டர் என்ற புதிய பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில், அதாவது ஜூலை - செப்டம்பர் இடையிலான காலக்கட்டத்தில் பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு இணையான ரகத்தில் இந்த புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவி 4,314 மிமீ நீளமும், 1,809 மிமீ அகலமும், 1,644 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த கார் 2,585 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், க்ரெட்டாவை ஒப்பிடும்போது இதன் வீல்பேஸ் 25 மிமீ குறைவாக இருக்கிறது. மேலும், 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜி அஸ்டர் எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் சாதாரண வகை பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் 1.5 லிட்டர் எஞ்சின் 120 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 163 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவியில் லெவல் 1 ஆட்டோனாமஸ் தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது, க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் வழங்கப்படும் அதே ADAS தொழில்நுட்ப வசதி இந்த காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. தானியங்கி பார்க்கிங் வசதி, முன்னால், பின்னால் வரும் வாகனங்களின் வேகத்தை கணித்து இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தானியங்கி அவசர கால பிரேக் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இதன் மூலமாக பெற முடியும்.

இந்த எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 10.1 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்ஜி ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய எம்ஜி அஸ்டர் எஸ்யூவி ரூ.10 லட்சத்தையொட்டி ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.