805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் எஸ்யூவி கார்... ஹம்பிள் ஒன் பற்றிய தகவல்கள்!

அமெரிக்காவை சேர்ந்த ஹம்பிள் மோட்டார்ஸ் நிறுவனம் சூரிய மின்சக்தியில் இயங்கும் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்கி இருக்கிறது. இதுதான் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் மின்சார மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த எஸ்யூவி குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று எரிபொருள் வகை வாகனங்களை உருவாக்குவதில் உலகின் பெரும்பாலான வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இத்துறையில் இறங்கும் சில புதிய நிறுவனங்களும் புதுமையான தொழில்நுட்பத்துடன் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாற்று எரிபொருள் என்றாலே மின்சார வாகனங்கள்தான் சிறந்ததாக இருக்கும் என்ற கூற்று எழுந்துவிட்டது.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

இருப்பினும், மின்சார வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரியின் சார்ஜ் திறன் தீர்ந்து போனால் நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் சூழல் இருக்கிறது. எனவே, மின்சார வாகனங்களின் பேட்டரியை விரைவாக சார்ஜ் ஏற்றுவதற்கும், அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

இந்த சூழலில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹம்பிள் மோட்டார் நிறுவனம் சூரிய மின்சக்தியில் இயங்கும் புதிய எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது. அதாவது, சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின் ஆற்றலை பேட்டரியில் சேமித்து மின் மோட்டார் மூலமாக இந்த எஸ்யூவி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

ஏற்கனவே, ஹூண்டாய் சொனாட்டா மற்றும் கர்மா ரெவெரோ ஆகிய மாடல்களில் இதே போன்று கூரையில் சோலார் பேனல்களுடன் சூரிய மின்சக்தியில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், ஹம்பிள் ஒன் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிதான் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் எஸ்யூவி வகை வாகனமாக குறிப்பிடப்படுகிறது.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

புதிய ஹம்பிள் ஒன் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் 80 சதுர அடி பரப்புடைய கூரையில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து இந்த தகடுகள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

இந்த சூரிய மின் உற்பத்தி தகடுகள் மூலமாக நாள் ஒன்றுக்கு 96 கிமீ தூரம் வரை பயணிக்கும் அளவுக்கு மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதாவது, தினசரி பயன்பாட்டிற்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் 96 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

அதேநேரத்தில், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 805 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், நடைமுறை பயன்பாட்டில் இந்த காரின் ரேஞ்ச் குறையலாம்.

805 கிமீ ரேஞ்ச்... சூரிய மின்சக்தியில் இயங்கும் ஹம்பிள் ஒன் எஸ்யூவி... சிறப்புத் தகவல்கள்!

இந்த காருக்கு 1.09 லட்சம் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.81 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். வரும் 2024ம் ஆண்டு இதன் உற்பத்தி துவங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இப்போதே இந்த காருக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதுவரை 20 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.146 கோடி) மதிப்புடைய ஆர்டர்கள் கிடைத்துள்ளதாம்.

Most Read Articles

English summary
Here are some important details about Humble One Solar Powered Electric SUV.
Story first published: Thursday, April 29, 2021, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X