பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

டிசைனிலும், சிறப்பம்சங்களிலும் மிக அசத்தலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்த்தவுடனே வாங்கத் தூண்டும் வகையிலான இந்த புதிய எஸ்யூவி குறித்த முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

கடந்த மாதம் விற்பனைக்கு வந்து மார்க்கெட்டில் சக்கை போடு போட்டு வரும் நிஸான் மேக்னைட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் ரெனோ கைகர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எஞ்சின் உள்ளிட்ட சில முக்கிய பாகங்களை இரு கார்களும் பங்கிட்டுக் கொள்கின்றன.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ரெனோ கைகர் எஸ்யூவியில் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 72 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இரண்டு எஞ்சின் தேர்வுகளுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும். தவிரவும், சிவிடி மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இந்த காரில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய டிரைவிங் மோடுகள் இடம்பெறுகிறது.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவி 3.99 மீட்டர் நீளமும், 1.75 அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் 2.5 மீட்டர் வீல்பேஸ் நீளம் பெற்றிருக்கிறது. 1,012 கிலோ எடை கொண்டது. 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருக்கிறது. இந்த காரில் 16 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் 40 லிட்டர் எரிபொருள் கலன் கொடுக்கப்பட்டு இருக்கும். சோதனை நிலைகளில் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

ரெனோ கைகர் எஸ்யூவியில் அர்கமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, யுஎஸ்பி சாக்கெட், எம்பி4 வீடியோ பிளேயர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த காரில் 4 ஏர்பேக்குகள் இடம்பெறுகிறது. முன்புறத்தில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டும் கொடுக்கப்பட உள்ளது. பிஎம் 2.5 ஏர் ஃபில்டரும் கொடுக்கப்பட உள்ளது. ரேடார் சென்சார்களுடன் கூடிய ரிவர்ஸ் கேமரா உள்ளது. இந்த காரில் க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட், ரியர் ஸ்பாய்லர், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. 6 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் புதிய ரெனோ கைகர் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ரெனோ கைகர் எஸ்யூவி ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகச் சலுகையாக விலை குறைவாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நிஸான் மேக்னைட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Important Things About All New Renault Kiger SUV.
Story first published: Friday, January 29, 2021, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X