புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ற ஐடியா இருக்கா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய எஸ்யூவியை வாங்கும் திட்டத்துடன் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

காம்பேக்ட் எஸ்யூவி

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக வர இருக்கிறது. விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு இது சிறந்த மாற்று தேர்வாக அமையும். புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி 4,256 மிமீ நீளமும், 2,671 மிமீ வீல் பேஸ் நீளமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

அறிமுக தேதி

வரும் மார்ச் 18ந் தேதி புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி ஏ0 கட்டமைப்பின் கீழ், இந்தியாவுக்கான மாறுதல்களுடன் கூடிய எம்க்யூபி ஏ0 ஐஎன் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி இருக்கும் முதல் மேட் இன் இந்தியா கார் மாடலாகவும் இது வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

சிறப்பம்சங்கள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, 17 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

இன்டீரியர்

இன்டீரியர் மிகவும் கவரும் வகையில் இருக்கும் என்பது அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்கெட்ச் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. டேஷ்போர்டு மிகவும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். பெரிய தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பனோரமின் சன்ரூஃப் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட உள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரண்டு தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

டர்போ பெட்ரோல் எஞ்சின்

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். போலோ காரில் வழங்கப்படும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

பவர்ஃபுல் பெட்ரோல் மாடல்

மற்றொரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவியை புக் பண்ணப் போறீங்களா? - இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

எதிர்பார்க்கும் விலை

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மட்டுமின்றி, ரெனோ டஸ்ட்டர், நிஸான் கிக்ஸ், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Here are the some important things about all new Skoda Kushaq SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X