Just In
- 49 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி செலிரியோ கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த ஹேட்ச்பேக் காரை ஒரே ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்துள்ளது. அதுவும் கூட வெறும் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செலிரியோ காரை அப்டேட் செய்வதில் மாருதி சுஸுகி நிறுவனம் மிகவும் பொறுமையாக இருந்தாலும், அதன் போட்டி மாடல்கள் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளன. புதிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அவை அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டுள்ளன. எனவே போட்டியை சமாளிக்கும் வகையில், செலிரியோ ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.

சுமார் 6 ஆண்டு காலமாக விற்பனையில் உள்ள நிலையில், செலிரியோ ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறை மாடல் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை செலிரியோ கார் பற்றி மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காவிட்டாலும் கூட, இந்த புதிய மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

பிளாட்பார்ம்
புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ ஹேட்ச்பேக் YNC என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் எடை குறைந்த ஹார்டெக்ட் பிளாட்பார்மின் 5வது தலைமுறை வெர்ஷனில் இந்த புதிய மாடல் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிறைய கார்களில் இந்த பிளாட்பார்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், எஸ்-பிரெஸ்ஸோ, பலேனோ, ஸ்விஃப்ட், இக்னிஸ், டிசையர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

டிசைன்
தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய தலைமுறை செலிரியோ உருவத்தில் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கேபினில் விசாலமான இட வசதி கிடைக்கலாம். அத்துடன் தற்போதைய தலைமுறை மாடலின் டிசைன் பழையதாகி விட்டது. எனவே புதிய தலைமுறை மாடலுக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு புத்தம் புதிய டிசைனில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் காரை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள், புதிய தலைமுறை மாடலில் புதிய க்ரில், புதிய ஹெட்லேம்ப்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன.

அத்துடன் பனி விளக்குகளின் அமைவிடமும் மாற்றம் செய்யப்படலாம். இதுதவிர புதிய வீல்கள் மற்றும் புதிய டெயில்லைட்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான டிசைனில், புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் விற்பனைக்கு வரலாம்.

இன்ஜின்
புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக்கில் அதே 1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் K10B நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின்தான் தற்போதைய தலைமுறை மாடலில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் 1.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களில் தற்போது இந்த இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

அத்துடன் தற்போதைய மார்க்கெட் சூழலை கருத்தில் கொண்டு, புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் காரில், பெட்ரோல்-சிஎன்ஜி தேர்வையும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வும், ஆட்டோமேட்டிக் தேர்வு ஆப்ஷனலாகவும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.