தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கியமான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தை தொடங்கவுள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது அலுவலகத்தை பெங்களூரில் பதிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் கூறியிருந்தார்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

முதலில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை மட்டுமே தொடங்கவுள்ளது. நல்ல வரவேற்பு இருந்தால், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வது குறித்து அந்நிறுவனம் முடிவு செய்யும். டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 (Tesla Model 3) காரைதான் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைந்த தயாரிப்புகளில் ஒன்றாக மாடல் 3 உள்ளது. எனவேதான் இந்த கார் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக டெஸ்லா மாடல் 3 கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

டிசைன் என எடுத்து கொண்டால், டெஸ்லா மாடல் எஸ் போலவேதான் டெஸ்லா மாடல் 3 காரும் இருக்கும். ஆனால் உருவத்தில் இது சற்று சிறியது. விண்டுஷீல்டு முதல் பின் பக்க ஸ்பாய்லர் வரை முற்றிலும் கண்ணாடி மேற்கூரையை இந்த கார் பெற்றுள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா மாடல் 3 காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இதில், 15 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஒரு சப்-ஃவூபர் மற்றும் 2 ஆம்ப்ளிஃபயர்களுடன் 14 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 12 வழிகளில் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் மற்றும் பின் பக்க இருக்கைகள், 4 யுஎஸ்பி சி போர்ட்கள் மற்றும் 2 வயர்லெஸ் சார்ஜிங் போர்ட்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இதுதவிர டெஸ்லா மாடல் 3 காரில் ஆட்டோபைலட் வசதியும் இடம்பெற்றுள்ளது. ஸ்டியரிங், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் போன்றவற்றை ஆட்டோபைலட் கட்டுப்படுத்தி கொள்ளும். அதாவது கார் தானாகவே இயங்கும். அதற்காக காரை ஆட்டோபைலட்டில் போட்டு விட்டு நாம் பின் இருக்கையில் சென்று தூங்கலாம் என அர்த்தம் கொள்ள கூடாது.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

கார் ஆட்டோபைலட்டில் இருந்தாலும், ஓட்டுனர் தனது இருக்கையில் அமர்ந்து கண்காணிப்பது அவசியம் என டெஸ்லா நிறுவனமே கூறியுள்ளது. எந்த நேரத்திலும் ஓட்டுனர் காரை தனது கட்டுப்பாட்டில் எடுக்க தயார் நிலையில் இருப்பது அவசியம். இந்த ஆட்டோபைலட் தொழில்நுட்பம் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதை மீம்ஸ்கள் மூலம் தற்போது பலர் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அதே சமயம் ஸ்டாண்டர்டு ப்ளஸ், லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என மாடல் 3 காரை மூன்று பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. இதில், ஸ்டாண்டர்டு ப்ளஸ் வேரியண்ட் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றுள்ளது. இந்த வேரியண்ட்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 263 மைல்கள் (423 கிலோ மீட்டர்கள்) பயணிக்கலாம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 மைல்கள் (மணிக்கு 96 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 5.3 வினாடிகளில் இந்த வேரியண்ட் எட்டி விடும். அதே சமயம் லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்களும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களையும், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனையும் பெற்றிருக்கும்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

இதில், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 353 மைல்கள் (568 கிலோ மீட்டர்கள்) பயணம் செய்யலாம். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 மைல்கள் (மணிக்கு 96 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 மைல்கள் (507 கிலோ மீட்டர்கள்) பயணிக்கலாம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 மைல்கள் (மணிக்கு 96 கிலோ மீட்டர்கள்) என்ற வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டி விடும். இந்தியாவில் முதலில் ஸ்டாண்டர்டு ப்ளஸ் வேரியண்ட்டைதான் டெஸ்லா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற 2 வேரியண்ட்களும் பின் நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அதே நேரத்தில் டெஸ்லா நிறுவனம் மாடல் 3 காரை சிபியூ வழியில்தான் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். எனவே இதன் விலை நிச்சயம் அதிகமாகதான் இருக்கும். டெஸ்லா மாடல் 3 காரின் ஆரம்ப விலை 60 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) இருக்கலாம்.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அதே சமயம் மாடல் 3 கார்தான் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டெஸ்லா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விலை குறைவாக இருப்பதால், இந்திய சந்தைக்கு ஏற்றதாக இருக்கும் எனக்கருதி இந்தியாவிற்கான டெஸ்லாவின் முதல் காராக மாடல் 3 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுதான் வருகிறது.

தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...

அதேபோல் இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் காரை நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மாதங்களில் முன்பதிவு தொடங்கப்படும். டெஸ்லா நிறுவனத்தின் வருகை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Important Things You Should Know About The Upcoming Tesla Model 3 In India. Read in Tamil
Story first published: Monday, January 18, 2021, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X