உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் உலகளவில் வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. இதன் வெளியீடு குறித்த முக்கிய விபரங்களை இந்த பதிவில் காணலாம், வாங்க.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

ஹூண்டாய் நிறுவனம், அதன் புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி ரக காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. மிக விரைவில் இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே ஹூண்டாய் நிறுவனம் நமது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

வெளியீட்டை முன்னிட்டு இப்புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் க்ரெட்டா இந்தோனேசியா எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியாக, டீசர் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் இக்கார் தற்போது வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. இந்தோனேசியாவின் சிகரங், வெஸ்ட் ஜாவா பிளாண்டில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

இந்த பிளாண்டில் வைத்து தயாரிக்கப்படும் முதல் எஸ்யூவி ரக வாகனமாக க்ரெட்டா இருக்கின்றது. முன்னதாக இந்த ஆலையில் மிட்சைஸ் ரக எஸ்யூவி வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. புதுப்பிக்கப்பட்டிருக்கும் க்ரெட்டா எஸ்யூவி 2022ம் ஆண்டிற்குள் இந்திய சந்தையை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

ஆனால், இதன் வருகை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பித்தலின்கீழ் பன்முக மாற்றங்களை க்ரெட்டா பெற்றிருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

நான்காம் தலைமுறை டக்ஸன் காரை தழுவி இதற்கான புதுப்பித்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பாராமெட்ரிக் அணிகலன்கள் பேட்டர்ன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கச்சிதமான வடிவமைப்புடன் காட்சியளிக்கும் எல்இடி பகல்நேர மின் விளக்கு, பம்பர், ஏர் இன்டேக் மற்றும் பனி மின் விளக்கு உள்ளிட்டவை இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

இத்துடன், புதிய ஸ்கிட் பிளேட்டுகள் முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பின்பகுதி ஆகியவற்றுடனும் இப்புதிய க்ரெட்டா எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இதேபோல், காரின் உட்பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

அடிப்படை உட்பக்க தோற்றம் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவை புதிய பார்வை அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றுடன் புதிய தொழில்நுட்ப அம்சமாக அடாஸ், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், தானியங்கி அவசர கால பிரேக்கிங், ஃபார்வார்டு கொள்ளிசன் தவிர்ப்பு, ரியர் க்ராஸ்-டிராஃபிக் கொள்ளிசன் அசிஸ்ட் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

இதே அம்சங்கள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியே இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அது இந்தியாவில் விற்பனைக்கு வருமானால் எம்ஜி அஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக அமையும்.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

தற்போது இந்தோனேசியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் க்ரெட்டா எஸ்யூவியில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 144 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு சிவிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் வசதிகள் வழங்கப்படும்.

உலகளவில் அறிமுகமானது புதுப்பிக்கப்பட்ட Hyundai Creta! இதுதான் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கு!

புதிய க்ரெட்டா 279 மில்லியன் ருபையாவிற்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இது இந்திய மதிப்பில் ரூ. 14.56 லட்சம் ஆகும். இது ஆரம்ப நிலை வேரியண்டான ஆக்டீவின் விலை ஆகும். புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஒட்டுமொத்தமாக ஆக்டீவ், பிரைம், ஸ்டைல் மற்றும் டிரெண்ட் ஆகிய நான்கு விதமன தேர்வுகளில் இந்தோனேசியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
India bound 2022 hyundai creta suv globally unveiled
Story first published: Thursday, November 11, 2021, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X