மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள பிரபலமான 4x4 எஸ்யூவி வாகனங்களுள் மஹிந்திரா தாரும் ஒன்றாகும். இந்த 4-சக்கர-ட்ரைவ் கொண்ட எஸ்யூவி வாகனத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேம்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

ஏனெனில், மஹிந்திரா தார் வாகனங்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு சுமார் 1 வருடம் வரையில் உள்ளது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நம் செய்திதளத்தில், சிஎன்ஜி தொகுப்பை தனது தார் வாகனத்தில் டீலர்ஷிப்பின் உதவியுடன் பொருத்தி உரிமையாளர் ஒருவர் பரிசோதித்து பார்த்ததை பார்த்திருந்தோம்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

தற்போது அதே உரிமையாளர் கச்சிதமாக சிஎன்ஜி தொகுப்பு தற்போதைய தலைமுறை மஹிந்திரா தாரில் பொருத்தப்பட்டதற்கு பிறகு, வாகனத்தின் செயல்படுதிறன், எரிபொருள் திறன் உள்ளிட்டவை எவ்வாறு உள்ளன என்பதை தெரியப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். க்ரீன் ஃப்யூல்ஸ் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.

சிஎன்ஜி தொகுப்பை பெற்றுள்ள இந்த மஹிந்திரா தார் வாகனம் அதன் டர்போ-பெட்ரோல் வெர்சனாகும். இது நேரடி-இன்ஜெக்‌ஷன் யூனிட்டை கொண்ட என்ஜின் ஆகும். இதனை ஸ்பெஷல் தொகுப்பின் மூலம் பூஸ்ட் செய்ய முடியும். ஆனால் நார்மல் சிஎன்ஜி தொகுப்புகள் மஹிந்திரா தாரின் இந்த டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு சரிப்பட்டு வராது எனவும், இதனால் பிரத்யேக சிஎன்ஜி தொகுப்பை வழங்கியுள்ளதாகவும் வீடியோவில் வாகனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

வீடியோவில், சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்ட பின்னர் இந்த தார் வாகனத்தில் ஒரு ரவுண்ட் செல்ல தயாராகின்றனர். சிஎன்ஜி நிலையை குறிக்கும் ஸ்விட்ச் இந்த தாரின் உட்புற டேஸ்போர்டின் மைய கன்சோல் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்விட்ச் தவிர்த்து இந்த சிஎன்ஜி தார் வாகனத்தின் உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. எரிபொருளை, பெட்ரோலில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட இயற்கை வரிவாயுவிற்கு மாற்றிய பின்னர் எந்தவொரு தடையுமில்லா இயக்கத்தை உணர்வதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

அதேபோல் பயணத்தின்போதும் எந்தவொரு ஜெர்க்கும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது, பெட்ரோல் மஹிந்திரா தார் வாகனம் எவ்வாறு ஆரம்பத்தில் பிக்-அப் ஆகுமோ கிட்டத்தட்ட அதே மாதிரியாக, விரைவாக இந்த சிஎன்ஜி தாரும் ஆக்ஸலரேட்டரை கொடுத்தவுடன் பிக்-அப் ஆகிறது. பின்னர் ஓட்டுனர் இந்த எஸ்யூவியின் முழு வேகத்தை சோதித்து பார்க்கிறார்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இதன்படி வாகனம் மணிக்கு 100கிமீ வேகத்திற்கும் மேல் இயக்கப்பட்ட போதிலும், எந்தவொரு பழுதும் ஏற்பட்டதுபோல் இந்த வீடியோவில் காட்டப்படவில்லை. இதன் பின்னர் வாகனத்தின் மற்ற செயல்திறன்களை சோதிக்கும் சில பல சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதில் அத்தனை சோதனைகளையும் இந்த சிஎன்ஜி தார் வாகனம் பூர்த்தி செய்துள்ளது.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இது உரிமையாளருக்கு மிகவும் திருப்திக்கரமாக இருந்ததாக இந்த மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொண்டவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரும் இந்த சோதனைகளின் போது வாகனத்தில் இருந்தார். வாகனத்திற்கு அடிப்பகுதியில் இன்ஜெக்டர்கள், தணிப்பான்கள் மற்றும் நேரடி இன்ஜெக்‌ஷன் என்ஜினிற்கான இசியூ உள்ளிட்டவை அடங்கிய சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இவை தவிர, வயர்கள், பைப்கள் மற்றும் கம்பிகள் அனைத்தும் வாகனத்தின் அடிப்பகுதியில் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் 14 கிலோ எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. அழுத்தம் கொடுக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்புவதற்கான துளை பெட்ரோல் நிரப்பும் பகுதிக்கு அருகில், கஸ்டமைஸ்ட்டாக துளையிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இந்த கஸ்டமைஸ்ட்சேஷன் பணிகள் அனைத்தும் மிக நேர்த்தியாக நடைபெற்று முடிந்துள்ளதை இந்த வீடியோவில் உரிமையாளரின் முகத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய தலைமுறை தார் வாகனம் மட்டுமின்றி, கடந்த செப்டம்பரில் மஹிந்திரா அறிமுகப்படுத்திய எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரிலும் இத்தகைய சிஎன்ஜி தொகுப்பை பொருத்த முடியும் என இந்த மாடிஃபிகேஷன் பணிகளை மேற்கொண்டவர் கூறுகிறார்.

மஹிந்திரா தாரில் சிஎன்ஜி தொகுப்பை பொருத்தினால் என்ன ஆகும்? விளக்கும் வீடியோ இதோ உங்கள் பார்வைக்காக!

இரண்டாம் தலைமுறை தாரில் பெட்ரோல் என்ஜின் தேர்வுடன், டீசல் என்ஜின் தேர்வையும் மஹிந்திரா வழங்குகிறது. இந்த இரு வேரியண்ட்களிலும் 4x4 ட்ரைவ் அமைப்பு நிலையான தேர்வாக வழங்கப்படுகிறது. மஹிந்திரா தாரின் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India’s first Mahindra Thar CNG on video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X