மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

இந்திய தயாரிப்பான நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய பயணிகள் வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில், நிஸான் நிறுவனம் அதன் புதுமுக மேக்னைட் காரை அறிமுகப்படுத்தியது. இது ஓர் சப்4 மீட்டர் ரக காராகும். இக்காருக்கு ரூ. 4.99 லட்சம் என்ற மிக மிக குறைந்த விலையை நிறுவனம் ஆரம்பத்தில் நிர்ணயித்தது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

அறிமுகம் காரணமாக குறிப்பிட்ட நாட்கள் வரை இந்த விலையிலேயே மேக்னைட் விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் கூறியிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் இருந்து இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 50 ஆயிரம் வரை உயர்வு செய்யப்பட்டது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

ஆகையால், தற்போது ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது ஓர் குறைந்த விலை கார் என்கிற காரணத்தினாலும், எக்கச்சக்க சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

இந்த வரவேற்பை அதிகரிக்கச் செய்கின்ற வகையில் தற்போது இந்த மலிவு விலை கார் பற்றிய கூடுதல் சிறப்பு தகவல் வெளியாகியிருக்கின்றது. ஏசியன் என்சிஏபி அமைப்பு அண்மையில் இக்காரை க்ராஷ் டெஸ்ட் (மோதல் பரிசோதனை)-க்கு உட்படுத்தியது. இந்த பல பரீட்சையில் நிஸான் மேக்னைட் கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள் என்ற பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

அதாவது பாதுகாப்பான பயணங்களுக்கு மிகவும் உகந்த கார் என்பதை இந்த பல பரீட்சையின் மூலம் தெரிய வைத்திருக்கின்றது. ஏசியன் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது இந்தோனேசியாவிற்கான மேக்னைட் காராகும். இதுவே இக்கட்டான சூழ்நிலையிலும் அதிக பாதுகாப்பினை வழங்கக் கூடிய கார் என்பதை நிரூபித்திருக்கின்றது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

இது வேண்டுமானால் இந்தோனேசியாவிற்கான மேக்னைட் காராக இருக்கலாம். ஆனால், இதனை நிஸான் நிறுவனம் இந்தியாவில் ஏற்றுமதி செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இக்கார் அந்த நாட்டில் மட்டுமில்ல நம்முடைய நாட்டிலும் அதிக பாதுகாப்பானதே. இதனையே மேக்னைட் உறுதி செய்திருக்கின்றது.

மலிவு விலை காருக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா?

நிஸான் மேக்னைட் காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ் (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), இபிடி, இரு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் வார்னிங் ஹசார்ட் சிஸ்டம் என பல இடம்பெற்றிருக்கின்றன. இதனால்தான் இக்கார் பாதுகாப்பிற்கு மிகவும் உகந்த வாகனம் என்பதை நிரூபனம் செய்திருக்கின்றது.

இக்கார் பெரியவர்களின் பாதுகாப்பில் 39.02 புள்ளிகளையும், சிறியவர்களின் பாதுகாப்பில் 16.31 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது. இதுதவிர, பிற சிறப்பு அம்சங்களில் 15.28 புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையிலேயே நிஸான் மேக்னைட் ஓர் நான்கு நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பது தெரியவந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
India Made Indonesian-Spec Model Nissan Magnite Gets 4 Star Safety Rating In ASEAN NCAP. Read In Tamil.
Story first published: Monday, February 22, 2021, 18:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X