இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

2021ஆம் ஆண்டு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டில் ஏகப்பட்ட இந்தியன் கார்கள் உலகளாவிய என்சிஏபி (NCAP) மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் சில மாடல்கள் சராசரி மதிப்பெண்கள் உடன் சோதனைகளை நிறைவு செய்துள்ளன.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

சில மாடல்கள் மொத்த இந்திய தயாரிப்புகளுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் மதிப்பீட்டு நட்சத்திரங்களை பெற்றுள்ளன. அவை என்னென்ன? சோதனையில் அவை பெற்ற மதிப்பெண்கள் எத்தனை என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

டாடா பஞ்ச்

டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி மாடல் அளவில் சிறியதாக இருப்பினும் பாதுகாப்பு விஷயத்திற்கு வரும்போது எந்தவொரு சமரசத்தையும் இந்த டாடா கார் செய்து கொள்ளவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

18 வயது நிரம்பியோர்க்கான பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திரங்களையும் பெற்றிருந்த பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு குழந்தை பயணி பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பஞ்ச் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.9.39 லட்சம் வரையில் நிர்ணயித்துள்ளது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700

பிராண்டின் புதிய லோகோ உடன் மாடர்ன் மஹிந்திரா காராக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி700 அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கடந்த நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உலகளாவிய என்சிஏபி சோதனைகளில் இந்த கார் உட்படுத்தப்பட்டது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

டாடா பஞ்சை போல இந்த மஹிந்திரா எஸ்யூவி காரும் 18 வயது நிரம்பியோர்க்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை சொந்தமாக்கி இருந்தது. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை பெற்றிருந்தது. மஹிந்திரா கார்கள் வரிசையில் மிகவும் பாதுகாப்பான காராக எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவிக்கு அடுத்து எக்ஸ்யூவி700 விளங்குகிறது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

டாடா டியாகோ மற்றும் டிகோர்

பஞ்ச் மாடலுக்கு முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் உலகளாவிய மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மற்ற டாடா கார்கள் டியாகோ மற்றும் டிகோர் ஆகும். ஆனால் இந்த பட்ஜெட் ரக ஹேட்ச்பேக் மற்றும் காம்பெக்ட் செடான் கார்கள் மோதல் சோதனைகளில் 4 நட்சத்திரங்களையே பெற்றன.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

அதாவது 18 வயது நிரம்பியோர்க்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை பெற்றிருந்த டியாகோ & டிகோர் கார்களுக்கு குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. விலை குறைவான டாடா கார்களாக இருப்பினும், இவற்றில் முன்பக்கத்தில் 2 காற்றுப்பைகள் நிலையான தேர்வாக கொடுக்கப்படுகின்றன.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

டாடா டிகோர் இவி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் காராக டிகோர் இவி உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டது. தோற்றத்தில் புதிய அப்கிரேட்களுடன் இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்ட டிகோர் இவி இந்த மோதல் சோதனைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டு நான்கு நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

தற்கால அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் பெற்ற டிகோர் இவி-யில் இரு காற்றுப்பைகள் நிலையான தேர்வாக கொடுக்கப்படுகின்றன. இந்த இரட்டை காற்றுப்பைகள் மட்டுமின்றி, இபிடி உடன் ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக சென்சார்கள் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் இந்த எலக்ட்ரிக் டாடா காம்பெக்ட் செடான் கார் பெறுகிறது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

நிஸான் மேக்னைட் எஸ்யூவி

மேலுள்ளவை அனைத்தும் இந்திய கார் பிராண்ட்களின் மூலமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கார்களாகும். ஆனால் மேக்னைட் ஆனது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸானின் மூலம் இந்தியாவில் நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராகும். இதுவும் இந்த 2021ஆம் ஆண்டில் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

அத்துடன், கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஆசியன் என்சிஏபி சோதனைகளிலும் இந்த ஜப்பானிய எஸ்யூவி கார் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சோதனைகளில் மேக்னைட்டிற்கு பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் நிஸான் மேக்னைட் 2020 டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கார்கள் இவ்வளவு பாதுகாப்பானவைகளா!! 2021இல் உலகளாவிய NCAP சோதனைகளில் உட்படுத்தப்பட்ட மாடல்கள்!

இந்த நிஸான் காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், டாப் வேரியண்ட்களில் வாகன நிலைப்பாட்டு கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் மலை தொடர்களில் ஏறுவதற்கான கண்ட்ரோல் உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Indian Cars that passed global crash tests in 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X