டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 வாகனம் இந்தியாவில் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றை வந்தடைந்துள்ளது. இது தொடர்பான படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான இசுஸு அதன் கமர்ஷியல் வாகனங்களின் வரிசையை புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகிறது.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஆனால் டி-மேக்ஸ் வி-க்ராஸ் மற்றும் எம்யு-எக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய தனிப்பயன்பாட்டு வாகனங்களின் வரிசை இன்னமும் பிஎஸ்6 நிலைப்பாட்டிற்கு அப்டேட் செய்யப்படாமல் தான் உள்ளது.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

இருப்பினும் இதில் டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனம் பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை அதன் சோதனை ஓட்டங்களின் மூலம் அறிந்திருந்தோம். இந்த நிலையில் தற்போது இந்த பிஎஸ்6 வாகனம் இந்தியாவின் ஷோரூம் ஒன்றில் காட்சித்தந்துள்ளது.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

கார் தேக்கோ செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் இரு வெவ்வேறு விதமான நிறங்களில் இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனங்கள் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

இதில் நீல நிறத்தில் இருக்கும் வாகனம் டி-மேக்ஸ் வி-க்ராஸ் பிஎஸ்6 மாடலின் விலைமிக்க இசட் ப்ரெஸ்டிஜ் வேரியண்ட் ஆகும். அதுவே சில்வர் நிறத்தில் இருக்கும் வாகனம் விலை குறைவான வேரியண்ட்டாக இருக்க வேண்டும்.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ஏனெனில் சில்வர் நிற டி-மேக்ஸ் வி-க்ராஸில் மேற்கூரை தண்டவாளங்கள், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை அம்சங்களை பார்க்க முடியவில்லை. ஆனால் இவை அனைத்தையும் நீல நிற வேரியண்ட்டில் பார்க்க முடிகிறது.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

அதேநேரம் இந்த டாப் இசட் வேரியண்ட்டின் பின்பக்கத்தில் டிடிஐ முத்திரையையும் பார்க்கலாம். இதனால் இந்த பிக்-அப் வாகனத்தில் வழக்கமான 1.9 லிட்டர் டீசல் என்ஜின் தான் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டிருக்கும்.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

அதுவே விலை குறைவான வேரியண்ட்களில் 2.5 லிட்டர் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின்கள் பிஎஸ்4 வெர்சனில் அதிகப்பட்சமாக வெளிப்படுத்திய ஆற்றலை தான் பிஎஸ்6 வெர்சனிலும் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

பிஎஸ்4 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தில் இந்த என்ஜின்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டன. தோற்றத்தை பொறுத்தவரையில் முந்தைய பிஎஸ்4 மாடலுக்கும் இந்த பிஎஸ்6 மாடலுக்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

டீலர்ஷிப் ஷோரூமில் பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ்!! விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

இருப்பினும் உட்புற கேபினை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை ஏற்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் சற்று ப்ரிமீயம் உணர்வளிக்கக்கூடியதாக எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
BS6 Isuzu D-Max V-Cross Arrives At Dealerships Ahead Of Expected April Launch.
Story first published: Thursday, April 1, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X