தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

இசுஸு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்திற்கான உத்தரவாத காலத்தையும், சேவை காலத்தையும் அதிகப்படுத்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

கொரோனா வைரஸின் 2வது அலையின் எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்சமயம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மருந்தக கடைகளை தவிர்த்து, வணிக வளாகங்கள் மற்றும் மளிகை கடைகள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில் ஊரடங்கு உத்தரவினால் டீலர்ஷிப் ஷோரூம்கள் கடந்த மே மாத மத்தியில் இருந்தே அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன விற்பனை கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்திருப்பதை பற்றி நிறுவனங்கள் வாரியாக பார்த்து வருகிறோம்.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

அதுமட்டுமின்றி வாகன ஷோரூம்கள் மூடியிருப்பதால் வாங்கப்பட்ட வாகனத்திற்கான உத்தரவாதம் மற்றும் இலவச சர்வீஸ்களை வாடிக்கையாளர்கள் பெற முடியாமல் போகியுள்ளது. இதன் காரணமாக தனது வாகனங்களுக்கான உத்தரவாதம் மற்றும் இலவச சேவைக்கான காலத்தை சில மாதங்களுக்கு நீட்டித்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

இந்த வகையில் தற்போது ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் இசுஸு இந்தியாவில் விற்பனை செய்துள்ள அதன் வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தையும், சேவையை பெறுவதற்கான அட்டவணையும் ஜூலை 31ஆம் தேதி வரையில் அதிகப்படுத்தியுள்ளது.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

இசுஸு இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மே 31ஆம் தேதி வரையில் யார் யாருடைய இசுஸு வாகனங்களின் உத்தரவாத காலம் முடிவடைய உள்ளதோ அவர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

அதேபோல் மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு சேவையை பெற வேண்டியவர்களுக்கும் ஜூலை 31 வரையில் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் தான் இசுஸு இந்தியா நிறுவனம் அதன் பிஎஸ்6 வாகனங்களாக டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக் மற்றும் எம்யு-எக்ஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

இதில் ஆஃப்-ரோட்டிற்கான வாகனமாக விளங்கும் இசுஸு டி-மேக்ஸ் பிக்அப் ட்ரக் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப புதிய என்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 டி-மேக்ஸிற்கான எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.16.98 லட்சத்தில் இருந்து ரூ.24.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடரும் ஊரடங்கு... வாகனங்களுக்கான உத்தரவாத காலத்தை அதிகப்படுத்தியது இசுஸு!!

இசுஸு எம்யு-எக்ஸ் எஸ்யூவி காரை பொறுத்தவரையில், இதில் புதியதாக பிஎஸ்6 1.9 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஸ்யூவி வாகனத்தில் 2-சக்கர ட்ரைவ் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டங்களும் தேர்வுகளாக கொண்டுவரப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu extends warranty and periodic maintenance services.
Story first published: Thursday, June 3, 2021, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X