டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய தலைமுறை வி-க்ராஸ் மற்றும் வி-க்ராஸ் ஐ-லேண்டர் கார்களின் இந்திய வருகையை இசுஸு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரு இசுஸு வாகனங்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தெரிந்து கொள்வோம்.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் இன்னும் சில வாரங்களில் புதிய வி-க்ராஸ் மற்றும் வி-க்ராஸ் ஹை-லேண்டர் கார்களை அறிமுகப்படுத்திவிடும் என்றே தெரிகிறது. வி-க்ராஸின் முந்தைய தலைமுறை காரை அடிப்படையாக கொண்ட அதன் ஹை-லேண்டர் வெர்சன் குறைவான விலையில் விற்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

நேபாளத்தில் விற்பனையில் உள்ள இசுஸு வி-க்ராஸ் ஹை-லேண்டர் வாகனத்தின் விலை ரூ.56.90 லட்சங்கள் என உள்ளது. தற்சமயம் இந்த இசுஸு பிக்அப் ட்ரக் வாகனம் ஸ்டாண்டர்ட், ஹை (இசட்) மற்றும் இசட் பிரெஸ்டிஜ் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.16.54 லட்சம் மற்றும் ரூ.18.06 லட்சம் மற்றும் ரூ.19.99 லட்சம் என உள்ளன. புதிய ஹை-லேண்டருக்கும் இவற்றிற்கும் இடையில் பெரிய அளவில் தோற்ற வித்தியாசமும் இல்லை.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

நேபாள வி-க்ராஸ் ஹை-லேண்டரின் உட்புறத்தில் 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், சாய்வான ஸ்டேரிங் சக்கரம், முன் மற்றும் பின்புற இருக்கைகளில் தலையணை, மேனுவலான ஏசி உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் ப்ரேக் உதவி, முன்பக்க டிஸ்க் ப்ரேக் மற்றும் இரும்பினாலான அடிப்பகுதியையும் வி-க்ராஸ் ஹை-லேண்டர் பெறுகிறது.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

2021 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் 1.9 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த என்ஜினை 4-சக்கர ட்ரைவ் அல்லது பின்சக்கர ட்ரைவ் தேர்வில் வாங்க முடியும்.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த டீசல் என்ஜின் உடன் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 3.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்விலும் இந்த வாகனம் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக எவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தெரியவில்லை.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போதைய வி-க்ராஸில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சம் 134 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பரிமாண அளவுகளில் புதியதுக்கும் பழையதுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கில் புதிய வேரியண்ட்டை கொண்டுவரும் இசுஸு!! விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதனால் பிஎஸ்6 டி-மேக்ஸ் வி-க்ராஸின் நீளம் 5295மிமீ, அகலம் 1860மிமீ, உயரம் 1780மிமீ மற்றும் க்ரவுண்ட் கிளியரென்ஸின் அளவு 220மிமீ ஆகும். புதிய தலைமுறை வி-க்ராஸின் விலை நிச்சயம் விற்பனையில் இருக்கும் டி-மேக்ஸ் வி-க்ராஸின் விலையை காட்டிலும் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Isuzu to launch V-Cross Hi-Lander, next-gen V-Cross. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X