60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

பிரபலமான இ-டைப் காரின் 60 வருட நிறைவை நினைவுக்கூறும் விதமாக ஜாகுவார் நிறுவனம் ஆறு ஜோடியில் லிமிடெட் எடிசன்களை கொண்டுவருகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

ஜாகுவார் இ-டைப் முதன்முதலாக 1961ல் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூபே காருக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியதை அடுத்து இ-டைப் ரோட்ஸ்டரை மாடலையும் மிக விரைவாக ஜாகுவார் கொண்டுவந்தது.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இந்த இரு லெஜண்ட்ரி ஜாகுவார் கார்களின் 60 ஆண்டு நிறைவை பெருமைப்படுத்தும் விதமாகவே இந்த இ-டைப் 60 கலெக்‌ஷனில் இ-டைப் 60 எடிசன் கூபே, இ-டைப் 60 எடிசன் ரோட்ஸ்டர் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இந்த இரு ஸ்பெஷல் எடிசன் கார்களும் 1960களில் விற்பனையில் இருந்த இ-டைப் கார்களின் க்ரே & பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. தலா 6 என மொத்தம் 12 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்களை கிங் நெர்ட் என்பவர் வடிவமைத்துள்ளார்.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இதில் ஒவ்வொரு காரையும் பெயிண்ட் செய்ய கிட்டத்தட்ட 100 மணிநேரங்கள் ஆகுவதாக கூறியுள்ள ஜாகுவார் நிறுவனம் இந்த ஸ்பெஷன் எடிசன் கார்கள் ஒவ்வொன்றும் அவற்றின் உரிமையாளர்களின் ஆலோசனைகளின்படியே அலங்கரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இந்த 6-ஜோடிகளிலும் பல்வேறு தனித்துவமான டிசைன் பாகங்கள் மற்றும் நுட்பமான மேம்பாடுகள் காரின் பயன்பாட்டையும், இயக்கு தன்மையையும் மேம்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் & மேம்படுத்தப்பட்ட கூலிங் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இந்த பிரத்யேகமான 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மேம்பட்ட நம்பகத்தன்மை மற்றும் அதிக ஆயுள் ஆகியவற்றிற்காக அனைத்து விதங்களிலும் ஒத்திசைவு, ஹெலிகல் கட் கியர்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட வார்ப்பு அலுமினிய உறை ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

அதுமட்டுமில்லாமல் இந்த கார்கள் சேட்டிலைட் நாவிகேஷன் உள்ளமைக்கப்பட்ட ஜாகுவாரின் கிளாசிக் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதியையும் பெறவுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இவற்றில் 265 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 3.8 லிட்டர் 6-சிலிண்டர் எக்ஸ்கே என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

மெருக்கூட்டப்பட்ட இரும்பினால் எக்ஸாஸ்ட் குழாயினை ஏற்கவுள்ள ஸ்பெஷல் எடிசன் கார்களில் '60 இ-டைப் 1961- 2021' என்ற முத்திரைகள் காரை சுற்றிலும் பொனெட், எரிபொருள் நிரப்பும் பகுதியின் மூடி, சேசிஸ் தட்டு, உட்புறத்தில் மைய கன்சோல் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

60 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஜாகுவார் இ-டைப்!! பெருமைப்படுத்த தயாராகும் லிமிடெட் எடிசன்கள்...

இந்த கார்களை பெறும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு கோடையில் இங்கிலாந்தில் உள்ள கோவெண்ட்ரியில் இருந்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா வரையில் கிட்டத்தட்ட 1,200கிமீ யாத்திரையில் அவர்களது இ-டைப் ஸ்பெஷல் எடிசன் கார்களுடன் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar celebrates 60 years of the iconic E-type with six limited-edition pairs. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X