ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

கடந்த ஆண்டு இறுதியில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை தற்போது இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்யூவி கார் புத்துணர்ச்சியான டிசைன், கூடுதல் தொழிற்நுட்பங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

இதன்படி இந்த ஜாகுவார் ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்க க்ரில் மற்றும் பம்பர்களில் சில திருத்தியமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பக்க பொனெட்டின் நீளம் க்ரில் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்இடி ஹெட்லேம்ப்கள் கூர்மையான வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

அதேநேரம் புதிய எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக ஆர்-டைனாமிக் தொகுப்புடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஜாகுவார் தெரிவித்துள்ளது. இந்த தொகுப்பின் மூலம் காரின் தோற்றத்தை மேலும் மெருக்கேற்றி கொள்ள முடியும்.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

வெளிப்புறத்தை போல் காரின் உட்புற கேபினின் தோற்றமும் புதிய டிசைனிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. டேஸ்போர்டில் இரு முனைகளிலும் வழங்கப்பட்டுள்ள இரு ஏசி துளைகளுக்கும் இடையில் காரின் மொத்த அகலத்திற்கும் கிடைமட்டமான ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

இவற்றுடன் ஜாகுவார் ஐ-பேஸில் இருந்து பெறப்பட்ட புதிய ஸ்டேரிங் சக்கரம், பெரிய தொடுத்திரை, திருத்தியமைக்கப்பட்ட ஏசி கண்ட்ரோல்கள் மற்றும் சுழற்றக்கூடிய கியர் க்னாப்பிற்கு மாற்றாக சிறிய அளவில் கியர் லிவர் உள்ளிட்டவற்றை ஹைலைட்களாக இதன் கேபினில் பார்க்க முடிகிறது.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

பிரெஸ்டிஜ் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள மை2020 எஃப்-பேஸ் காரில் க்ரூஸ் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி கொள்ளக்கூடிய வகையில் ஓட்டுனர் இருக்கை, பின்பக்க பார்க்கிங் கேமிரா, சுற்றிலும் விளக்கு, 4-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச்சில் தொடுத்திரை மற்றும் 12.3 இன்ச்சில் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை உள்ளிட்டவற்றை ஜாகுவார் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

இவற்றுடன் ஆர்-டைனாமிக் எஸ் ட்ரிம்-இல் கூடுதல் வசதிகளும் கிடைக்கும். பிஎஸ்6 மாற்றத்தினால் எஃப்-பேஸில் வழங்கிவந்த 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வை ஜாகுவார் நீக்கி இருந்தது. ஆனால் அதிகப்பட்சமாக 180 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் புதிய எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் மீண்டும் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

அதேநேரம் அதிகப்பட்சமாக 250எச்பி ஆற்றலை வழங்கக்கூடிய வழக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜினிலும் இந்த எஸ்யூவி கார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் செட்அப் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் இரு என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கும்.

ஜாகுவார் எஃப்-பேஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது!! டெலிவிரிகள் அடுத்த மாதம்...

தற்போதைய எஃப்-பேஸ் காரின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ.66.07 லட்சமாக உள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை சற்று அதிகமாக ரூ.68- 75 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம். தற்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இதன் டெலிவிரி பணிகள் அடுத்த மே மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar F-Pace facelift bookings open in India.
Story first published: Wednesday, April 7, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X